உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்

தமிழக சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி விருப்ப மனு வினியோகத்தை இன்று (டிச.,15) அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடங்கிவைத்தார். தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை பூர்த்தி செய்து, இபிஎஸ் இடம் சேலம் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. வழக்கமாக ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான், அரசியல் கட்சிகள் தேர்தலை நோக்கி வேகமெடுத்து செயல்படும். டிசம்பர் மாதத்தின் மத்தியிலேயே, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி விறுவிறுப்பு காட்டி வருகின்றன. ஏற்கனவே, அ.ம.மு.க.,வும் காங்கிரசும், விருப்ப மனு பெற்றுக் கொண்டிருக்கின்றன. சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று (டிச.,15) தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வினியோகத்தை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடங்கிவைத்தார். தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை பூர்த்தி செய்து, இபிஎஸ் இடம் சேலம் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். கட்சியினர் வரும் டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம். தினமும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மனுக்களை பெறலாம். பூர்த்தி செய்து, 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Field Marshal
டிச 15, 2025 14:23

விருப்ப மனுவுடன் செலுத்தப்படும் பணம் திருப்பி தருவதில்லை..தேர்தல் செலவுக்கு பயன்படுத்துவது வழக்கம்.. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது 234 தொகுதிகளிலும் அவர் பெயரில் தொண்டர்களும் நிர்வாகிகளும் விருப்ப மனு அளிப்பது வழக்கம்


sundarsvpr
டிச 15, 2025 13:23

தேர்தல் விருப்ப மனு பெறுவது வேண்டாத வேலை. ஏமாற்று வித்தை நாடகம். கட்சி தலைமைக்கு நன்றாக தெரியும் நேர்மையான திறமையான நபர்கள் யார் என்று. அதுவல்ல காரணம். இதுமட்டும் போதாது.போட்டியிடுபவருக்கு பசை இருக்கவேண்டும் அடியாட்கள் தேவை.


Field Marshal
டிச 15, 2025 13:47

போட்டியிடுபவருக்கு பசை இருக்கவேண்டும் ...உங்களுக்கு போட்டியிடும் ஆசை இருக்கா ?


திகழ்ஓவியன்
டிச 15, 2025 14:20

அது எல்லாம் கூட்டணி வெச்சிருக்கிற பீசப்பி யில் இருக்கு, கோயல் வேறு வந்து விட்டார் அமோகம் தான்


கோவிந்த்
டிச 15, 2025 13:20

இந்த கூட்டத்திற்கு இது ஒரு குறுக்கு வழியில் சம்பாதிக்க ....


Raja
டிச 15, 2025 13:19

அதிமுக வெல்லட்டும்.


Kadaparai Mani
டிச 15, 2025 14:08

அதிமுக அலுவலகத்தில் மிகப்பெரிய கூட்டம் .தொண்டர் எழுச்சி காணப்பட்டது .அதை எந்த மீடியா காட்டாது. எழுதாது


Jay Ram
டிச 15, 2025 17:01

கண்டிப்பாக வெல்லும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை