உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடியல் மக்களுக்கல்ல ஸ்டாலின் குடும்பத்துக்கே: தமிழக பா.ஜ., தாக்கு

விடியல் மக்களுக்கல்ல ஸ்டாலின் குடும்பத்துக்கே: தமிழக பா.ஜ., தாக்கு

போத்தனூர் : ''தி.மு.க.ஆட்சியில் விடியல் என்பது மக்களுக்கு அல்ல. முதல்வரின் குடும்பத்திற்குத் தான்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.கோவை மலுமிச்சம்பட்டியில் தெற்கு மாவட்ட பா.ஜ. சார்பில், மாவட்ட மாநாடு நடந்தது.அதில் பங்கேற்று நயினார் நாகேந்திரன் பேசியதாவது:பிரதமர் மோடி காசி சங்கமத்தில் பேசும்போது, உத்தரபிரதேச மாநிலத்தில், பள்ளிகளில் தமிழை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். அதன்படி, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக முதல்வர், 'தமிழ், தமிழ்' என கூறி தமிழை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்டாலினின் ஒரே நோக்கம், தன்னுடைய மகனை முதல்வராக்க வேண்டும் என்பதே. இதற்காக, காங்., கூட்டணியை இறுக்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்.விரைவில் நானும், அண்ணாமலையும் அரசியல் ஆட்டம் ஆட போகிறோம்.அது மோடியும், அமித் ஷாவும் எதற்காக இந்த கூட்டணியை அமைத்தார்களோ, அதை நிறைவேற்றவே ஆட்டம் ஆடப் போகிறோம். தமிழகத்திற்கு மத்திய அரசு என்ன செய்தது என கேட்கிறார்கள். 14 லட்சம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில், நடுநிலையோடு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை நிறைவேற்றி இருந்தால், எந்த பிரசனையும் இருந்திருக்காது. நிறைவேற்றாதாலேயே ஒரு உயிர் போனது. இனி வரும் பவுர்ணமி நாட்களிலும், திருப்பரங்குன்றத்தில் மிகச் சிறப்பாக கிரிவலம் நடத்தப்படும். தமிழகத்தில் யாருக்கும் விடிவில்லை; முதல்வர் குடும்பத்துக்கு மட்டும் தான் விடிவு. தமிழகத்தில், 17 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது; யாரும் தப்பிக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

MARUTHU PANDIAR
டிச 30, 2025 05:06

சில ஆட்களுக்கு சோறு தண்ணி இல்லன்னா கூட பரவ இல்ல. இந்த ரெண்டு மொழி நாலு மொழி இப்படியே ஒளறிக்கிட்டிருப்பானுவ. பொழப்ப கூட விட்டுருவானுவ.65~ 66 இல் மூளை சலவை செய்யப்பட ஆட்களின் எச்சம் கொஞ்சம் நஞ்சமில்லை, எந்த நாட்டிலும் இல்லாத படு கேவலம். மொழிக்காக ஒரு கொள்கையாம், நீட்டை ஒரு ஆசாமி கொண்டு வரணும். அப்புறம் அதே ஆசாமி விலக்கு கேப்பாப்ல. கச்சத்தீவை தார வாப்பாப்ல, முற்றுப்புள்ளி யார் வைக்கணும்? காவிரியில் குறுக்கே அணைகள் கட்டினால் ஆட்சேபணை இல்லம்ப்பாப்ல அப்புறம் அதே ஆசாமி "ஒன்றிய" அரசை திட்டி அறிக்கை விடுவாப்ல. என்ன பழனி இது?


Palanisamy T
டிச 30, 2025 02:34

"விடியல் மக்களுக்கு அல்ல ஸ்டாலின் குடும்பத்திற்க்கே" என்று நீங்கள் சொல்வது உண்மை. அதைவிட தமிழகத்தில் பாஜக வின் ஆட்சியால் தமிழர்களுக்கு என்றும் விடியல் கிடைக்காது மற்றவர்களுக்கு வேண்டுமானால் கிடைக்கும். பாஜகவின் மொழிவேறு, சிந்தனை வேறு, கலாச்சாரம் வேறு. சைவ பூமியான தமிழகத்தில் பாஜகவின் இம் முரணப்படான கொள்கை களையும் கோட்ப்பாடுகளையும் திணிக்க வேண்டாம். இனி திமுக என்ற கட்சியை கருணாநிதியின் குடும்பப் பிடியிலிருந்து மக்கள்தான் காப்பாற்றவேண்டும். முதலில் தமிழகத்தின் இருமொழிக் கொள்கை யை பாஜக வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவேண்டும். மேலும் நாடாளுமன்ற அனுமதி பெறாமல் கொடுத்த கச்ச தீவை மீட்டு மீனவர்ப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வையுங்கள்.


MARUTHU PANDIAR
டிச 30, 2025 02:23

இப்பவாவது மாநிலத்து தலைவருக்கு இணையான ஒரு நல்ல பதவியை அண்ணாமலைக்கு கொடுங்கப்பா. ஒரு இளைஞரின் அசுரர் வேக அரசியலை பயன் படுத்தாம பாழ் பண்ணிட்டீங்களேப்பா. அவுர எப்பவோ டெல்லிக்கு கூப்பிட்டு சமாதானப் படுத்தாம ஈகோ பார்த்து தமிழக மக்களை வஞ்சிச்சுட்டீங்களேப்பா.


vaiko
டிச 29, 2025 23:47

விளையாட்டு பிள்ளைkal


vivek
டிச 30, 2025 09:01

வைகோ பாவம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை