டாப் 10 தூய்மை பட்டியலில் இடம்பெறாத தமிழக நகரங்கள்: அண்ணாமலை கவலை
சென்னை: மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் சார்பில், கடந்த 2014 ம் ஆண்டு தூய்மை பாரதம் திட்டம் துவங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் உள்ளாட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.மத்திய அரசின் சார்பில், சுவெச் சர்வெக்ஷான் 2024- 25 ம் ஆண்டுக்கான தூய்மை கணக்கெடுப்பு பணிகள் குறித்து சர்வே எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் 10 லட்சம் மேற்பட்டோர் வசிக்கும் மக்கள் பிரிவில் தேசிய அளவில் கோவை 28 வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை 28 வது இடத்தை பிடித்துள்ளது.இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சுவெச் சர்வெக்ஷான் 2024- 25 ம் ஆண்டுக்கான தூய்மை பட்டியலில் தமிழகத்தின் எந்த நகரும் முதல் 10 இடங்களுக்குள் வராதது மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை 28 வதுஇடத்திலம், சென்னை 38 வது இடத்திலும் உள்ளது.சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் தூய்மையான சென்னை என்று தி.மு.க., அரசு ஆண்டுதோறும் பெருமளவில் பட்ஜெட் ஒதுக்கீடு செய்தும் பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகள் மேலும் அசுத்தமாகவும், சுகாதாரமற்றதாகவும் மாறி வருகின்றன.பொது கழிப்பறைகளை பராமரிப்பதற்கான ஒப்பந்தங்கள் கூட ஊழல் குற்றச்சாட்டுகளால் கறைபட்டுள்ள ஒரு ஆட்சியில் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும். நாமக்கல்லுக்கு தமிழகத்தின் நம்பிக்கைக்குரியதூய்மை விருது வழங்கப்பட்டுள்ளதுதான் தமிழகத்தின் ஒரே நல்ல விஷயம். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.