உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: பிரதமர் மோடி தலையிட முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: பிரதமர் மோடி தலையிட முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில், பிரதமர் மோடி ராஜதந்திர ரீதியாக தலையிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்தும், படகுகளை இலங்கை அரசு நாட்டுடமையாக்குவதை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் படகுகளில் கறுப்புக் கொடியை கட்டி 700க்கும் மேற்பட்ட மீனவரகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த செய்தியை மேற்கொள் காட்டி எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0qyobdm8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில், பிரதமர் மோடி ராஜதந்திர ரீதியாக தலையிட வேண்டும். 3 மீனவர்கள் அநியாயமாக நீண்ட காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகள் இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது கவலை அளிக்கிறது. தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவதை பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்ய வேண்டும். மீனவர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பது முக்கியம். ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிக்க இந்தியர்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Arachi
பிப் 19, 2024 16:34

மக்களுக்கு மதம் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள மதம் தேவை. ஆனால் மதத்திற்கே மதம் பிடித்து விடக்கூடாது.


K.n. Dhasarathan
பிப் 19, 2024 13:16

இவர் போயி எப்படி இலங்கை மீனவர்கள் பற்றி பேசுவார், ஒருவேளை பதவியில் இல்லாமல் இருந்தால் பேசுவார் போல, யோசனை பண்ணுங்கள் மக்களே ?


Senthoora
பிப் 19, 2024 15:00

அன்பரே, மீனவர் பிரச்சனை இரண்டு நாடுகளுக்கு இடையில் பிரச்சனை, மாநில பிரச்சனை அல்ல. இரண்டு நாட்டு பிரதமர்களும் பேசி முடிவு எடுக்கணும். இந்த கடிதம் பிரதமருக்கு எழுதுவது, ஜெயலலிதா அம்மையார், எடப்பாடியும் இதுக்கு முதல் செய்தார்கள்.இப்போ இவரு செய்கிறார். அடுத்து அண்ணாமலை முதல்வரானால் அவரும் இதைத்தான் செய்வார். ஏன்னா வடக்கே ஆள்பவர்களுக்கு தெரியும் தமிழனை ஏமாற்றுவது எளிது, ஏன்னா தமிழனுக்கு தமிழனே எதிரி. எங்கே பதிவாகும் கருத்துக்களை பார்த்தாலே புரிந்துக்கொள்ளலாம்.


Ramakrishnan
பிப் 19, 2024 07:40

தனித் தமிழ் நாடு வந்தால் இதை எப்படி சமாளிப்பர் என்று கவலையாக இருக்கிறது.


ராமகிருஷ்ணன்
பிப் 19, 2024 07:31

திமுகவின் அல்லக்கை கும்பல்கள் இராமேஸ்வரம் கடலில் முழங்கால் அளவு தண்ணீர்ல நின்று கொண்டு போராட்டம் நடத்தனும். மத்திய அரசு தலையிட வேண்டாம்


Ramesh Sargam
பிப் 19, 2024 00:15

இப்பொழுது மாத்திரம் பிரதமர் மோடியின் ராஜதந்திரம் வேண்டுமாம். மற்ற நேரங்களில் அவரை வசைபாடுவது. என்ன மனுஷனப்பா நீ...?


vadivelu
பிப் 19, 2024 06:44

அப்படி சொல்லாதீர்கள், நங்கள் மாணவர்களை உக்ரைனில் இருந்து அழைத்து வந்தோம், தமிழர்களை சூடானில் இருந்தும் அழைத்து வந்தோம், அதே போல் மீனவர்களையும் மீட்ப்போம் , அப்படி நாங்கள் செய்யவா, இல்லை நீங்கள் செய்கிறீர்களா என்று கேட்க்கிறோம் அவ்வளவே.நாளின் காமாட்சி சொல்வர்.


venkates
பிப் 18, 2024 23:32

திராவிடம் பேசி தமிழ்நாடு aliக்கிறது


Anbuselvan
பிப் 18, 2024 22:42

கொஞ்ச நாள் பொறுங்க. கச்ச தீவை மீட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க போகிறது பிஜேபி. மீனவர் நலன் மீனவர் நலன் என நீலி கண்ணீர் விடும் அனைத்து கட்சிகளுக்கும் விரைவில் ஆப்பு வரும்.


Arachi
பிப் 18, 2024 22:15

Is our maritime border coast gaurd alive or not to avoid the arrest of fishermen community fishing between India and Sri Lanka? Why is our maritime coast gaurd unable to prevent the arrest of our innocent fishermen by the Srilankan coast guard. Is it due to our inefficiency?


பேசும் தமிழன்
பிப் 18, 2024 21:53

ஸ்டிக்கர் கூட பிரிண்ட் செய்து ரெடியாக வைத்து விட்டோம்... நீங்கள் இலங்கையுடன் பேசி.... மீனவர்களை வெளியே கொண்டு வந்து விட்டால்.... நாங்கள் ஸ்டிக்கர் ஒட்டி..... நல்ல பெயரை வாங்கி கொண்டு விசுவோம் !!!


அப்புசாமி
பிப் 18, 2024 20:24

ரெண்டு பக்கமும் கருத்துப் போடும் தத்திகள்.இருக்காங்க.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை