உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடன் வாங்கி வட்டி செலுத்தும் தமிழக அரசு

கடன் வாங்கி வட்டி செலுத்தும் தமிழக அரசு

தமிழக கஜானாவில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சி கஜானாவை காலி செய்து சென்றது. 2021ல் நிதியே இன்றி, இந்த அரசு பொறுப்பேற்று, நிதி மேலாண்மையுடன் திறம்பட செயல்படுகிறது. கடனுக்கே கடன் வாங்கி தான் வட்டி செலுத்துகிறோம். மகளிர் உரிமை தொகைக்கு மாதம், 1,500 கோடி செலவாகிறது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதியில், 85 சதவீதத்தை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். தாலிக்கு தங்கம் கடந்த ஆட்சியில், 2 ஆண்டுகளாக கொடுக்காமல் விண்ணப்பத்தை கிடப்பில் போட்டு விட்டனர். தங்கம் விலை உயர்ந்து விட்டதால் தான், மாற்று திட்டத்தை இந்த அரசு யோசிக்கத் துவங்கி விட்டது. - செல்வப்பெருந்தகை,தமிழக காங்., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை