வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இதுதான் திராவிட மாடல் அரசு
இப்படியும் ஒரு மாடல் அரசு. இதுதானே மக்களுக்கு பிடித்திருக்கிறது? பின்னே என்ன? இனி மத்திய அரசு இந்த மாடல் அரசுக்கு பணம் கொடுக்காமல், நேராக செலவழிக்கவேண்டும். செய்வார்களா?
சென்னை:'தமிழகத்திற்கு வழங்கப்பட்ட கொரோனா நிதியில், 265 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை' என, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அதன் விபரம்:தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கவும், கட்டுப்படுத்தவும், மத்திய, மாநில நிதிகள், மாநில பேரிடர் நிவாரண நிதி, பி.எம்.கேர்ஸ் மற்றும் முதல்வர் நிவாரண நிதிகளை தேசிய சுகாதார இயக்கம் நிர்வகித்தது.அதன்படி, மத்திய அரசின், 1,435.59 கோடி ரூபாய்; மாநில அரசின், 351.89 கோடி ரூபாய் என, 1,787.48 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டது. அதில், 1,522.75 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், 264.73 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை. அதேபோல், மத்திய அரசால் வழங்கப்பட்ட, 3,757 ஆக்சிஜன் செறிவூட்டிகளில், 147 பயன்படுத்தப்படவில்லை. கொரோனா காலத்தில், 'என் - 95' முகக்கவசங்கள் மொத்தமாக கொள்முதல் செய்திருந்தால், 82.95 லட்சம் ரூபாய் செலவை தவிர்த்திருக்கலாம். மேலும், குடும்ப நல இயக்குநரகத்தில் வட்டார விரிவாக்க கல்வியாளர், குடும்ப நல உதவியாளர், கல்வியாளர், பெண் சுகாதார பார்வையாளர், மகப்பேறு குழந்தை நல அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, 75 சதவீதத்துக்கு மேற்பட்ட பற்றாக்குறை காணப்படுகிறது.மருத்துவ பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தனிப்பட்ட வாரியம் அமைக்கப்பட்டிருந்த போதிலும், ஆட்சேர்ப்பில் தாமதம் காணப்படுகிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்தின் கீழ் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதால், மாற்று மருந்துகளை பிரபலமாக்கும் அரசின் கொள்கை பாதிப்படைந்துள்ளது.எனவே, குடும்ப நல திட்டங்களை தொடர்ந்து திறம்பட அமல்படுத்துவதற்கு போதுமான பணியாளர்கள் இருப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதான் திராவிட மாடல் அரசு
இப்படியும் ஒரு மாடல் அரசு. இதுதானே மக்களுக்கு பிடித்திருக்கிறது? பின்னே என்ன? இனி மத்திய அரசு இந்த மாடல் அரசுக்கு பணம் கொடுக்காமல், நேராக செலவழிக்கவேண்டும். செய்வார்களா?