உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், 10 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

தமிழக உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், 10 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

சென்னை: தமிழக உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை செயலராக மாற்றப்பட்டு உள்ளார். புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழகத்தில் பல துறைகளின் செயலாளர்களை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=31o0rdfk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

செயலாளர்கள் மாற்றம்

*உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.*தகவல் தொழில்நுட்ப துறை செயலாளராக இருந்த தீரஜ்குமார் உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.*சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவுத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.*தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல்த்துறை செயலாளராக ராஜாராமும்*பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை செயலாளராக சுரேஷ்குமாரும்*பள்ளி கல்வித்துறை செயலாளராக மதுமதியும்*கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை செயலாளராக கோபாலும்*பொதுமக்கள் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக ரீட்டா ஹரீஸ் தக்கரும்*மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆக சிகிதாமஸ் வைத்தியனும்*புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் ஆக சரவண வேல்ராஜூம்*பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ஆக விஜயராஜ் குமாரும்*மனித வளத்துறை செயலாளராக நந்தகுமாரும்*அரசு செலவினத்துறை செயலாளர் ஆக நாகராஜனும்*தமிழக சர்க்கரைத்துறை மேலாண் இயக்குநராக அன்பழகனும்*வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலாளராக பிரஜேந்திர நவ்நீத்தும்*தமிழக வீட்டுவசதி வாரியத்துறை மேலாண் இயக்குநராக சமீரனும்*தமிழக உள்கட்டமைப்பு வளர்ச்சி வாரிய தலைவராக பூஜா குல்கர்னியும்*தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக வீரராகவ ராவும்*தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் செயலாளராக குமார் ஜெயந்த்*சிறப்பு முயற்சிகள் துறை செயலாளராக ஹர்சகாய் மீனாவும்*தமிழக வழிகாட்டித்துறை செயலாளராக அலர்மேல்மங்கையும் நியமிக்கப்பட்டு உளளனர்.

இணைச்செயலாளர்

*பொதுத்துறை துணை செயலாளராக விஷ்ணு சந்திரனும்*சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைச் செயலாளர் ஆக வளர்மதியும்*உள்துறை இணைச்செயலாளராக ஆனி மேரியும்*நிதித்துறை துணை செயலாளராக சி.ஏ.ரிஷப்*வீட்டு வசதித்துறை இணைச் செயலாளராக ஸ்ரவன் குமார் ஜடாவத்*சேலம் மாவட்ட ஊரக வேலைவாய்ப்பு ஆணைய மேலாண் இயக்குநராக லலிதாதியா நீலமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி கமிஷனர்கள் மாற்றம்

* பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபன் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.*ஈரோடு மாநகராட்சி கமிஷனராக நரன்வாரே மணிஷ் சங்கர் ராவும்*தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் ஆக பாலசந்தரும்*சென்னை மாநகராட்சி கல்விப்பிரிவு இணை கமிஷனராக விஜயாராணியும்*சென்னை மாநகராட்சி இணை கமிஷனராக சிவகிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

10 மாவட்ட கலெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

*ராணிப்பேட்டை கலெக்டராக சந்திரகலாவும்*புதுக்கோட்டை கலெக்டராக அருணாவும்*நீலகிரி கலெக்டராக லஷ்மி பையா தன்னீரும்*தஞ்சாவூர் கலெக்டராக பிரியங்காவும்*நாகப்பட்டினம் கலெக்டராக ஆகாஷூம்*அரியலூர் கலெக்டராக ரத்தினசாமியும்*கடலூர் கலெக்டராக ஆதித்யா செந்தில்குமாரும்*கன்னியாகுமரி கலெக்டராக அழகுமீனாவும்*பெரம்பலூர் கலெக்டராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ்வும்*ராமநாதபுரம் கலெக்டராக சிம்ரன்ஜீத் கலோனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

joseph
ஜூலை 18, 2024 06:53

அமுதாவை மாற்றியதில் எந்த தவறுமில்லை. எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு திறமை இல்லை. ஆனால் ராதாகிருஷ்ணனை மாற்றினது இந்த ஆட்சியின் நேர்மையற்ற மனசாட்சிக்கு விரோதமான செயல்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 18, 2024 06:40

காலச் சக்கரத்தின் சுழற்சி காரணமாக மீண்டும் முகமது பின் துக்ளக் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்துள்ளது முஸ்லிம் மத அபிமானி ரூபம் மூலமாக.


AYYADURAI AYYA
ஜூலை 17, 2024 22:33

அருமை...GOOD...


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 16, 2024 21:48

ஒரு சர்க்கஸ் பபூன் அரசன் ஆகிவிட்டால் அவனால் நிர்வாகம் செய்ய முடியாது ..... மாறாக அரசவை சர்க்கஸ் கூடாரம் ஆகிவிடும் .......


VR NARAYANAN
ஜூலை 16, 2024 20:39

அரசு உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு இருப்பதிற்கு பல காரணங்கள் இருக்கலாம்...அதே நேரத்தில் அமைச்சர்கள் அவர்கள் இலாக்காக்களை சரி வர செய்யவில்லை என்றால் அவர்களை மாற்றவே / நீக்கவோ ஏன் முதலமைச்சர் தயங்குகிறார்...கட்சியில் புதிய இளைமுறை அமைச்சர்களை உருவாக்கலாமே...இதுதான் திராவிடமாடலா?????


Ashanmugam
ஜூலை 16, 2024 20:28

ஒன்னுதுக்கும் உதவாத ஆமை போல செயல்படும் தலைமை செயலாளரை முதலில் மாற்ற வேண்டும். பொது மக்கள் தங்கள் தீராத குறைகளை இமெயில் மூலம் தலைமை செயலாளருக்கு அனுப்பினால் ஒரு பதிலும் வருவதில்லை அந்த அளவிற்கு பொது மக்களின் குறைகளை தீர்க்க அலட்சிய போக்கு, பதவி மம்தம். செவிடன் காதில் சங்கு ஊதினாலும் கேட்கும், சிஎம் குப்பைதோட்டி செல், சிஎஸ், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் இவர்களுக்கு 100 முறை இமெயில் அனுப்பினாலும் பதில் வராது. இதே நான் புரட்சி தலைவி முன்னாள் முதல்வர் ஜெயா அம்மா ஆட்சியில் இருக்கும் போது ஓரே இமெயிலில் லஞ்சம் தராமல் பல காரியங்களை சாதித்துள்ளேன். வேலூரில் மாவட்ட ஆட்சியர், தலைமை செயலாளர் கூட பல முறை இமெயில் மூலம் மாற்றி உள்ளேன். ஆனால் ஊழலில் ஊறிப்போன பணம், மக்கள் பலம், ரவுடி பலம் கொண்ட திமுக ஆட்சியில் நியாயத்தை கேட்டால் உடனடியாக கைது செய்கின்றனர். மறைமுகமாக ரவுடி கொலைவெறி தாக்குதல் தமிழகத்தில் நடக்கிறது. இந்த கொடுமைகளை தட்டி கேட்க வலுவான அதிமுக கட்சி தற்போது இல்லை?


rama adhavan
ஜூலை 16, 2024 20:21

பாத்திரத்தை அலுவலர்கள் மாற்றி விட்டால் பாலின் ஊழல், திறமை இன்மை நிறம் மாறுமா, என்ற பழைய பாடல் தான் நினைவுக்கு வருகிறது. ஜெய்சங்கர் நடித்த ஆயிரம் பொய் என்ற நினைவு


Arachi
ஜூலை 16, 2024 18:49

ஒரே இடத்தில் பணியாற்ற ஐ எ எஸ் அதிகாரிகள் அலுவலக உதவியாளரோ கண் காணிப்பவர்களோ அல்ல. இவர்களது ஆழ்ந்த சிந்தனைகளும் செயலாக்க திறமையும் எல்லாத் துறைகளுக்கும் தேவையானது. அதனால் வெவ்வேறு துறைகளுக்கு பணிமாற்றம் செய்வது தவறில்லை.


rama adhavan
ஜூலை 16, 2024 20:31

அடிக்கடி மாறுதல் செய்ய அவர்கள் ஒன்றும் விளையாட்டு மைதானத்தில் உள்ள பந்து அல்ல. அவர்களை 3 ஆண்டுகள் ஒரு இடத்தில் இருக்கச் செய்ய வேண்டும். மேலும் அண்ணா மேலாண்மை நிலையம், ஆவணக் காப்பகம், ஒழுங்கு முறை ஆணையம் தலைமை பதவி எல்லாம் மேலாண்மை பதவிகளா? ஒரு சிறிய துணை இயக்குனர் இயக்குனர் பதவிகள். 38 மாவட்ட ஆட்சியர் தேவையா? முன்பு 70இல் 13 தான் இருந்தது.


V GOPALAN
ஜூலை 16, 2024 16:52

Chief secretary knows only to type transfer letter as dictated by stalin.


HoneyBee
ஜூலை 16, 2024 16:32

சில மாதங்களுக்கு முன் திமுகவின் கலெக்ஷனை நான் கட்டுகிறேன் என்று சொன்னதில் இருந்து இராதாகிருஷ்ணன் இடமாறுதலை எதிர் பார்த்து இருப்பார்.


ஆரூர் ரங்
ஜூலை 16, 2024 18:26

அவருக்கு கமிஷனர் பதவி பனிஷ்மென்ட் போஸ்டிங்தான். இருபதாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கீழ்நிலைப் பதவியில் உட்கார வைக்கப்பட்டால் என்ன அர்த்தம்? அந்த அறிவாளி மேயர் பிரியாவுடன் வேலை செய்வது சும்மாவா?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை