உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தற்கொலைகளின் தலைநகரம் தமிழகம்: கவர்னர் ரவி அதிர்ச்சி தகவல்

தற்கொலைகளின் தலைநகரம் தமிழகம்: கவர்னர் ரவி அதிர்ச்சி தகவல்

பெ.நா.பாளையம் : ''தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது அதிகம். நாட்டிலேயே தற்கொலைகளின் தலைநகரமாக தமிழகம் உள்ளது,'' என, தமிழக கவர்னர் ரவி விமர்சித்தார். கோவை மாவட்டம் துடியலுார் அருகே உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில், 'சிந்து சரஸ்வதி நாகரிகம், சிந்து நதி முதல் தாமிரபரணி வரை நாகரிகத்தின் நோக்கும், போக்கும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தின் துவக்க விழா இன்று நடந்தது. இதில், கவர்னர் ரவி பேசியதாவது:இந்திய நாகரிகம் மிகவும் பழமையானது. இங்கிலாந்தில் உள்ள எடின்பரோ, கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைகள், கணிதம், மருத்துவம், வானியல் உள்ளிட்ட தொன்மையான இந்திய அறிவு மரபை கண்டறிந்து, மொழி பெயர்த்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டின. மொழி, மண்டலம் உள்ளிட்டவைகளில் நாம் வேறுபட்டாலும், வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் நம் நாட்டின் தத்துவம். சரஸ்வதி நதி குறித்து ரிக் வேதம் குறிப்பிடுகிறது. சரஸ்வதி நதி குறித்த செய்திகள் வெறும் புராணமல்ல; அறிவியல் ரீதியாக சரஸ்வதி நதி இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் சரஸ்வதி நதி குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.உலகின் அனைத்து படைப்புகளும் ஒன்று தான் என்பது நம் வேதங்களின் அடிப்படை. ஆனால், இன்று மனிதர்கள் மன அழுத்தத்தாலும், பல்வேறு முரண்பாடுகளாலும் பாதிப்புகளை சந்திக்கின்றனர். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்ற ஆவணத்தில் தகவல் உள்ளது. ஆண்டுதோறும், 20,000 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்கின்றனர்.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சியோடு, இழந்த நம் கலாசாரத்தையும், மறைக்கப்பட்ட தத்துவங்களையும் மீட்டெடுத்து, மீண்டும் மக்களிடம் சேர்க்கும் பணியை செய்து வருகிறது. ஆரியம் மற்றும் திராவிடத்தை பொய்யான கருத்துகளின் அடிப்படையில் பிரிக்க பார்த்தால், அவர்கள் தோற்று போவார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Padmasridharan
டிச 23, 2025 09:50

எந்த உறவுப்பாலமும் மனம் திறந்து பேச வீட்டில் இருப்பதில்லையே. பணம் மட்டுமே வாழ்க்கையென்று ஆக்கி விட்டிருக்கிறார்களே சாமி..


அப்பாவி
டிச 20, 2025 10:32

எல்லாமே அரசியல்வாதிகளின் தலையீடுதான்.


Barakat Ali
டிச 20, 2025 09:35

இதில் அதிர்ச்சியடையவோ, வியப்படையவோ ஒன்றுமில்லை ..... பல வருடங்களாகவே தமிழகம் தற்கொலையில் முன்னிலை வகுக்கிறது ......


Svs Yaadum oore
டிச 20, 2025 08:02

தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு ஆகியவை 15 க்கும் மேற்பட்ட தற்கொலை விகிதத்தைக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் வட மாநிலங்களான பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தற்கொலை 3 விகிதத்துக்கும் குறைவு ஆகும்......இதில் வடக்கன் படிக்காதவனாம் ...


Svs Yaadum oore
டிச 20, 2025 07:50

திராவிடனுங்க தின்பது தமிழன் உழைப்பை , திராவிடனுங்க தங்குவது தமிழன் நிலத்தில் ஆனால் ஆதரிப்பது உருது அரபியை .....


Kasimani Baskaran
டிச 20, 2025 07:41

நிஜத்தை விட நிழலை நம்பும் தமிழர்கள் தற்கொலை செய்து கொள்வது 99.9% அர்த்தமற்றதாகவே இருக்கிறது.


h
டிச 20, 2025 07:21

Amanda amam


தமிழன் மணி
டிச 20, 2025 01:13

என்னடா ஒருத்தன 12 நாளா ஆளையே காணோமே என தேடிக் கொண்டிருந்தேன் உள்ளேன் ஐயா என வந்து வம்படியாக உளறிக் கொண்டிருக்கிறது.........


vivek
டிச 20, 2025 05:13

மணி சில நாள் கோமாவில் இருந்தாரா...செய்திகள் படிப்பதில்லையா


Modisha
டிச 20, 2025 09:29

நீ மாதா கோவில் மணி . பெயரை மாற்றிக்கொள் .


Priyan Vadanad
டிச 20, 2025 01:06

சார் தேர்தல் சீத்திருத்த செய்திகளை படித்துவிட்டார் போல தெரிகிறது. இறந்துபோனவர்கள், அட்ரஸ் மாறிப்போனவர்களையெல்லாம் சேர்த்துப்பிடித்து தற்கொலை கணக்கை காட்டிவிட்டார். கெட்டிக்கார அரசியல்வாதி. சந்தர்ப்பம் பார்த்து அடிக்கிறார்.


vivek
டிச 20, 2025 05:11

இறந்து போனவர்களை கூட விட்டு விடாமல் பிழைப்பு நடத்தும் பிரியன் வடை


SANKAR
டிச 20, 2025 06:11

it is 62 per day in Maharashtra as per NCRB data.


எஸ் எஸ்
டிச 19, 2025 22:43

கவர்னர் மீது நாளை திராவிட தாக்குதல் ஆரம்பம் ஆகும். டிவி சேனல்களில் திருப்பரங்குன்றம் விஷயத்தை திசை திருப்பும் வேலை ஆரம்பம் ஆகும். ஸ்டார்ட் மியூசிக்!!


T.sthivinayagam
டிச 20, 2025 02:48

சாப்பிடுவது திராவிடர்கள் உழைப்பை தங்குவது திராவிடர்கள் நிலத்தில் ஆதரிப்பது ஆரியர்களை என்ன பொழப்போ என்று கிராம மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.


vivek
டிச 20, 2025 05:10

அடுத்தவர்கள் சொன்னார்கள் என்று சொல்லியே பிழைப்பு நடத்தும் சிவநாயகம் ......


Kasimani Baskaran
டிச 20, 2025 05:41

"சாப்பிடுவது திராவிடர்கள் உழைப்பை" - தமிழர்களின் இரத்தத்தை உறிஞ்சிக்குடிக்கும் திராவிடர் யார்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை