உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இணையவழி குற்றத்தடுப்பு தமிழக போலீசுக்கு 2ம் இடம்

இணையவழி குற்றத்தடுப்பு தமிழக போலீசுக்கு 2ம் இடம்

சென்னை:இணையவழி குற்றங்களை தடுப்பது மற்றும் அது தொடர்பான சட்டங்களை அமலாக்கம் செய்வது தொடர்பான போட்டியில், தமிழக போலீஸ் அணி இரண்டாவது இடம் பிடித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில், இணையவழி குற்றத்தடுப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடந்தது. மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன், மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அஜய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில், இணையவழி குற்றத்தடுப்பு மற்றும் சட்ட அமலாக்கம் குறித்து கருத்தரங்கு நடந்தது. இதில், போலீசார், வழக்கறிஞர்கள், இணையவழி குற்றத்தடுப்பு நிபுணர்கள் என, பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். மாநாட்டில் இணையவழி குற்றத்தடுப்பு மற்றும் சட்ட அமலாக்கம் தொடர்பாக போட்டி நடத்தப்பட்டது. தமிழக காவல் துறை சார் பில், இணையவழி குற்றப்பிரிவில் பணிபுரியும் விழுப்புரம் எஸ்.ஐ., ராஜசேகர், நாமக்கல் எஸ்.ஐ., பூர்ணிமா, வேலுார் எஸ்.ஐ., யுவராணி ஆகியோர் அடங்கிய அணி, இரண்டாம் இடம் பிடித்தது. இவர்களுக்கு, மாநில இணையவழி குற்றப்பிரிவு தலைமையக கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் மற்றும் பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி