உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதலீடுகளை குவிக்கும் ஆந்திரா; வாய்ப்பை தவறவிடும் தமிழகம் 

முதலீடுகளை குவிக்கும் ஆந்திரா; வாய்ப்பை தவறவிடும் தமிழகம் 

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்டை மாநிலமான ஆந்திரா, சமீப காலத்தில் மட்டும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் வாயிலாக, 10,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது. அந்நிறுவனங்கள் முதலில் தமிழகத்தில் தொழில் துவங்க ஆர்வம் காட்டிய நிலையில், ஆந்திராவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில், 'ஏசி' சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, 'கேரியர் குளோபல்' நிறுவனம், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. மேலும் அம்மாநிலத்தில், எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதுதவிர, அந்நிறுவனத்துக்கு உதிரிபாகங்களை வழங்கும் ஆறு நிறுவனங்கள், 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளன. மேலும், 'ஜூபிடர் ரினியூவபல்' நிறுவனம், 2,700 கோடி ரூபாய் முதலீட்டில், சூரியசக்தி மின் தகடுகளை உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க உள்ளது. 'ஸ்ரீஜா மகிளா மில்க் புரொட்யூசர்' மற்றும், 'மதர் டெய்ரி' நிறுவனங்களும் ஆலைகளை அமைக்க உள்ளன. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஆந்திரா, 10,000 கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ், கேரியர் உள்ளிட்டவை, தமிழகத்தில் தொழில் துவங்க ஆர்வம் காட்டின. திடீரென அந்நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகம் இழந்துள்ளது. இதற்கு, முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கையில், தமிழகம் சரியான முறையை கையாளவில்லை என்ற காரணம் கூறப்படுகிறது.

தொழில் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். தொழில் துறை அதிகாரிகள் முதல் உயர் மட்டத்தினர் வரை, கூட்டங்களில் பங்கேற்காமல் அறையில் தான் இருக்கின்றனர். ஆனால், அவர்களை சந்திக்க வருவோரிடம், 'முன்அனுமதி வாங்கி விட்டு வர வேண்டும்' என, அவர்களின் உதவியாளர்கள் கூறுகின்றனர். இது, துவக்கமே சரியில்லை என்ற மனநிலைக்கு முதலீட்டாளர்களை தள்ளுகிறது. சிறு நிறுவனமாக இருந்தாலும், தங்களை சந்திக்க வந்தவர்களை, தொழில் துறை அதிகாரிகளும், உயர்மட்டத்தினரும் சந்திக்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் தொழில் துவங்க விரைவாக அனுமதி அளிக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள், வேறு மாநிலங்களுக்கு செல்லவில்லை. 'மத்திய அரசின் சலுகைகள் கிடைப்பதற்காக, சில நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றிருக்கலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Gajageswari
ஜூன் 03, 2025 05:03

திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் சட்டபூர்வ அனுமதி பெற்றும் இயக்க முடியாது நிலை. வாழ்க திராவிடம்


shyamnats
ஜூன் 02, 2025 17:02

இவ்வாறு முதலீடுகள், நிறுவனங்கள் வெளியேறுவது ஒன்றும் முதன்முறை இல்லையே . இருந்த , இருக்கின்ற நிறுவனங்களையும் - ஸ்டெர்லிட் போல - மூடுவது , மத்திய அரசு சொல்லும் எந்த திட்டங்களையும் - சேலம் எட்டுவழி பாதை, கடலில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு, விழிஞம் துறைமுகம் போனது போன்றவற்றை குறிப்பிடலாம். தமிழ் நாட்டின் மீது அக்கறையுள்ள தலைவர்கள் தேவை.


அப்பாவி
ஜூன் 02, 2025 19:07

விழிஞம். வந்துச்சு. தூக்கம் போயிரும்னு பேசுனாரு. இப்போ கப்பலே கவுந்து நிறைய பேருக்கு தூக்கம் போச்சு.


அப்பாவி
ஜூன் 02, 2025 13:27

இந்தியான்னு பேசுங்கடா. இங்கே இல்லைன்னா அங்கே வேலைக்குப் போங்க. தெலுங்கு கத்துக்கோங்க.


Murthy
ஜூன் 02, 2025 12:45

நல்லது ......வடக்கான்களை குறைப்போம் .....


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 02, 2025 12:29

முதலீடுகள் வந்தால் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கும். அப்படி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.. கழகத்துக்கு அடிமைகள் கிடைக்க மாட்டார்கள் .... ஆகவே ..... இப்படித்தான் இனி ......


AaaAaaEee
ஜூன் 02, 2025 11:43

டாஸ்மாக் முதலீடு சொன்னா உடனே கிடைக்கும்


RAAJ68
ஜூன் 02, 2025 10:39

இங்கே பத்தாயிரம் கோடி முதலீடு என்றால் இவர்களுக்கு 5000 கோடி கமிஷன் கேட்பார்கள் எவன் இங்கு வருவான் தொழில ஆரம்பிப்பதற்கு


RAAJ68
ஜூன் 02, 2025 10:38

இந்த செய்திகளுக்கெல்லாம் நம்முடைய முதல்வர் பதில் கூற மாட்டார். கொள்ளையடித்த பணத்தில் பத்தாயிரம் பேருக்கு 24 வகையான சைவ அசைவ உணவு கொடுத்து 2026 இல் நாம் தான் ஜெயிப்போம் என்று ஆணவத்தில் இருக்கிறார்.


Svs Yaadum oore
ஜூன் 02, 2025 10:14

தேர்தல் நெருங்குதுல்ல.. இப்ப தலையை சொரிந்து சில்லறை பார்த்தா தான் உண்டாம்.. அது ஒன்றும் பெரிய பிரச்சனை எதுவுமில்லை ...மாதத்தில் நாலு தரம் பொதுக்குழு கூட்டம் நடத்தி மட்டன் கோலா உருண்டை , மட்டன் ப்ரை , மட்டன் பிரை ஆயில் , மட்டன் சால்ட் , வஞ்சிரம் ப்ரை , ஆற்று மீன் ப்ரை , சிக்கன் மசாலா , சிக்கன் ப்ரை , இறால் மசாலா , அவிச்ச முட்டை , குலாப் ஜாமுன் , சீரக சம்பா மட்டன் பிரியாணி என்று இந்த சாப்பாடு பொது குழு கூட்டம் நடத்தி ஓசியில் போட்டால் அதை சாப்பிட்டு இங்குள்ள திராவிடனுங்க வோட்டு போட்டுடுவாங்க ....


vbs manian
ஜூன் 02, 2025 09:27

நாயுடுவை மிஞ்ச யாருமில்லை. இன்னொரு மோடி.


சமீபத்திய செய்தி