வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழகம் தலை குனிய வேண்டாம்...ஆனால் நீங்கள் அனைவரும் முதலில் உதயா, இன்பா, என அனைவரிடமும் தலைகுனியாமல் இருங்கள்...அதுவே போதும்...
சென்னை: தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் திட்டமிடலின்படி, வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, பல்வேறு முன்னெடுப்புகளை, தி.மு.க., மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 'மத்திய அரசின் முன்பு தமிழகம் தலைகுனியாது' என்ற பிரசாரத்தை, தி.மு.க., துவக்க உள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், தி.மு.க., வின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' பயிற்சி கூட்டம், வரும் 28ம் தேதி மாமல்ல புரத்தில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் தலை குனிய வேண்டாம்...ஆனால் நீங்கள் அனைவரும் முதலில் உதயா, இன்பா, என அனைவரிடமும் தலைகுனியாமல் இருங்கள்...அதுவே போதும்...