உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஓட்டுவது போல் தமிழகத்தின் வளர்ச்சி: அண்ணாமலை கிண்டல்

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஓட்டுவது போல் தமிழகத்தின் வளர்ச்சி: அண்ணாமலை கிண்டல்

வேலூர்: தமிழகத்தின் வளர்ச்சி என்பது சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஓட்டுவது போல் உள்ளது. என வேலூரில் என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் அண்ணாமலை பேசுகையில் குறிப்பிட்டார்.மேலும் அவர் பேசியதாவது: மோடியை எதிர்த்து இன்றைக்கு வேட்பாளர்கள் இல்லை. பாஜ, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலை உங்கள் வீட்டை கதவை வந்து தட்டும். அமைச்சர் துரை முருகனின் மகன் எம்.பி கதிர் ஆனந்த் 5 ஆண்டுகளாக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. நிதி நிர்வாகம் குறித்து அமைச்சர் துரை முருகனை விட எனக்கு நன்றாக தெரியும். தமிழகத்தின் வளர்ச்சி என்பது சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஓட்டுவது போல் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kidtf193&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்தியில், ஊழலற்ற நல்லாட்சி தொடர்ந்திட, குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு, வேலூரின் வளர்ச்சிக்கு, மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக வேண்டும். தமிழகம் முழுவதும் பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். தமிழகத்தில், இத்தனை ஆண்டு காலமாக, மத அரசியலும், ஜாதி அரசியலும் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். திருப்பூரில் தங்கி பணிபுரிந்த 60 ஆயிரம் உத்திரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி அடைந்து இருப்பதால் அங்கு திரும்பி சென்றுவிட்டனர். வடமாநிலத்தவரை கேலி செய்த தி.மு.க., எப்படி சமாளிக்கப்போகிறது?. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Ramesh Sargam
பிப் 05, 2024 00:22

சரியாக கூறினீர்கள்.


K.Ramakrishnan
பிப் 04, 2024 23:31

டெல்லியில் பா.ஜனதா விலை பேசுவதாக சொன்னதற்காக முதல்வர் கெஜ்ரிவாலை போலீஸ் சம்மன் அளித்து விளக்கம் கேட்கிறது. அண்ணாமலை தினம் ஒரு குற்றச்சாட்டை கூறுகிறார். இதற்கு தமிழக போலீஸ் விளக்கம் கேட்பதாக இருந்தால்வரிக்கு வரி கேட்கலாம். அவ்வளவு குற்றச்சாட்டு. கிருபானந்த வாரியார்.. பாவம்... முருகனடிமை. 1993 ம் ஆண்டு வாரியார் முருகனிடம் சேர்ந்து விட்டார். அப்போது அண்ணாமலையின் வயது ஒன்பது. இவர் பிறந்தது கரூர் மாவட்டம். ஆனால், இவர் உடன் இருந்து பார்த்தது போல, வாரியாருக்கு அப்படி நடந்தது... என்றெல்லாம் சொல்கிறார்.இது பற்றி தமிழ்நாடு போலீஸ் விளக்கம் கேட்கலாமே... துரைமுருகனை விட நிதி நிர்வாகம் எனக்கு நன்றாக தெரியும் என்கிறார். ஆம்... அது உண்மை தான்.. சும்மா இருந்துகொண்டு நண்பர்கள் மாதந்தோறும் தரும் ரூ. எட்டு லட்சத்தில் ஆடம்பர வாழ்க்கை நடத்துகிற நிர்வாகம் அவருக்குத் தானே தெரியும்..


ஆரூர் ரங்
பிப் 05, 2024 12:55

பொன்முடி, BGR கம்பெனி பற்றி அண்ணாமலை ஆதாரங்களை வெளியிட்டார். இப்போ என்னாச்சி?


manokaransubbia coimbatore
பிப் 04, 2024 22:49

எங்க கொங்கு நாட்டு வரியை எங்களுக்கே கொடுத்து விட சொல்லு முதலில்


K.n. Dhasarathan
பிப் 04, 2024 21:17

பாவம் அண்ணாமலைக்கு இப்படி நிலைமை வரக்கூடாது எதோ வாயிக்கு வந்தது எல்லாம் பிதற்ற ஆரம்பித்து விட்டார், யாருக்காவது புரியுமா புரிந்தால் சரி.


AMSA
பிப் 04, 2024 22:34

இது புரிந்தால் நீங்கள் அறிவாளி .. இல்லையென்றால் முரசொலி வாசகர் .


g.s,rajan
பிப் 04, 2024 20:03

பழைய இரும்பு ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் ....


DVRR
பிப் 04, 2024 19:32

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஓட்டுவது போல்???வெறும் நாலு பேருக்கு காண்பிக்க இப்படி செய்தால் பரவாயில்லையே அதை வீடியோ பிடித்து ஏதோ சைக்கிளில் பல்லாயிரம் கிலோமீட்டர் செல்வது போல காண்பித்து???இப்படித்தான் திருட்டு திராவிட மடியல் அரசு செய்கின்றது.


g.s,rajan
பிப் 04, 2024 19:20

தா.மா.க வை கேலி செய்கிறார் போல் இருக்கு ....


katharika viyabari
பிப் 04, 2024 18:31

சைக்கிளை ஸ்டாண்டுபோட்டு ஓட்டினால்தான் பரவாயில்லையே. மக்களின் வரிப்பணம் அதிகாரிகளின் சம்பளத்திற்கு மட்டும்தான் விரயம் ஆகும். தமிழகத்தில் சைக்கிளை பின்னாடி சுற்றுகிறதால், அரசுப்பணம் திமுக கஜானஆவிற்கு சென்று விடுகிறது.


venugopal s
பிப் 04, 2024 18:19

படிக்காத அறிவில்லாதவன் இதுபோல பொய்கள் சொன்னால் கூட மன்னித்து விடலாம், ஆனால் படித்தவன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற அப்பட்டமாக பொய்கள் சொன்னால் அவர் மக்கள் நம்பிக்கைக்கு சிறிதும் தகுதியற்றவர்!


Arul Narayanan
பிப் 04, 2024 17:45

பொய் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். பின்னால் வரும் நேரிடும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை