உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அயோத்தி கோவிலுக்கு பல்லக்கு, கதவுகள் உருவாக்கிய தமிழக கலைஞர்கள்

அயோத்தி கோவிலுக்கு பல்லக்கு, கதவுகள் உருவாக்கிய தமிழக கலைஞர்கள்

மாமல்லபுரம்:அயோத்தி கோவிலுக்கு, மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்களின் கைவண்ணத்தில் மரக்கதவுகள் மற்றும் பல்லக்கு உருவாக்கப்பட்டுள்ளன.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேகம், 22ல் நடக்க உள்ளது. அந்நாளில், ராமர் சிலையை, பிரதிஷ்டைக்கு கொண்டு செல்லும் அலங்கார பல்லக்கு, கோவில் கர்ப்பகிரஹ வாயில் உள்ளிட்டவற்றில் பொருத்தப்பட்டுள்ள கலையம்ச மரக்கதவுகளை, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி பகுதியில் செயல்படும், 'மானசா' மரசிற்பக் கூடம் செதுக்கியுள்ளது.

அர்ப்பணிப்பு

இதுகுறித்து, அதன் உரிமையாளர், சிற்பக் கலைஞர் ரமேஷ் கூறியதாவது:கன்னியாகுமரியைச் சேர்ந்த நான், மாமல்லபுரம் அரசு கட்டட சிற்பக்கலைக் கல்லுாரியில், மரச் சிற்பக்கலை படித்து, சிற்பக்கூடம் நடத்துகிறேன்.சிற்பங்கள் செதுக்கத் தேவையான மரங்களை, ஹைதராபாத் மர விற்பனையாளரிடம் வாங்குவேன். ராமர் கோவிலில் அமையும் கலையம்ச மர வேலைப்பாடுகள் குறித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் தெரிவித்தார்.அரிய வாய்ப்பை பெற முடிவெடுத்து, என்னுடைய மர வேலைப்பாடுகள் குறித்து, அறக்கட்டளை நிர்வாகத்திடம் நேரடியாக விளக்கினேன். கோவிலின் முழுத்தோற்ற வரைபடத்தை அளித்து, கோவில் மாதிரியை, மரத்தில் செதுக்க கூறினர்; அதை செய்து அளித்தேன்.எல் அண்ட் டி நிறுவனம், கோவிலை வடிவமைக்கிறது. மாதிரி கோவில் சிற்பத்தில் திருப்தி அடைந்த நிறுவனம், அலங்கார மரக்கதவுகள் செதுக்கும்வாய்ப்பையும் அளித்தது.மஹாராஷ்டிரா மாநிலம், பலர்ஷா வனப்பகுதி தேக்கு மரங்களை, அறக்கட்டளை அளித்தது. 4,500 கன அடி அளவு, தகுதியான மரங்களை தேர்வு செய்தேன்.தமிழக கலைஞர்கள், 40 பேருடன், உத்தர பிரதேசம் சென்றேன். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்கி, பிரத்யேக கூடத்தில், நாங்கள் கொண்டு சென்ற கருவிகளை பொருத்தி, 2023 மே மாதம் பணிகளை துவக்கினோம். கோவில் பணிக்காக அர்ப்பணிப்புடன், கடும் வெயில், குளிரை பொருட்படுத்தாமல், தினமும் 12 மணி நேரம் பணிபுரிந்தோம்.அறக்கட்டளை நிர்வாகமே, அனைத்துக் கதவுகளுக்கான வடிவமைப்பு வரைபடத்தையும் அளித்தது. கதவின் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் செதுக்கி, அத்தோற்றத்தை நிர்வாகத்தினர் உறுதி செய்த பின், முழுமையாக செதுக்கினோம்.தற்போது, 48 கதவுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில், தரை தளம், முதல்தளம், இரண்டாம் தளம் என அமைக்கப்பட்டுள்ளது. தரை தள கர்ப்பகிரஹத்தில், ராமர் பிரதிஷ்டை செய்யப்படுகிறார்.அதன் பிரதட்சண வாயிலுக்கு, 8 அடி உயரம், 12 அடி அகல அளவில், மயில்கள் சிற்ப அலங்காரத்துடன், நான்கு மடிப்பு வடிவமைப்பில், கதவு செய்யப்பட்டுள்ளது. முகமண்டபம், மேல்தளத்திற்கு செல்லும் படிகள் துவங்குமிடம், பொருட்கள் இருப்பு அறைகள் ஆகியவற்றுக்கு, வெவ்வேறு அளவில், யானைகள் சிற்ப அலங்காரத்துடன், இரண்டு மடிப்பு கதவுகள் செய்யப்பட்டன.

ஒரே நாள்

கதவுகளுக்கு வேறு நிறுவனம், செப்புத்தகடு பொருத்தி, தங்க முலாம் பூசியுள்ளது. சில நாட்களுக்கு முன், ராமர் சிலையை, கர்ப்பகிரஹத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு செல்ல, சிறிய பல்லக்குசெய்யுமாறும் கூறினர்.அதையும், 3 அடி உயரம் 2 அடி அகலத்தில், கலையம்ச அலங்காரத்துடன் ஒரே நாளில் செய்து, அயோத்திக்கு அனுப்பினோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை