உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா; அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா; அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

அரியலூர்: தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக கூறி உள்ளார். அரியலூரில் அவர் அளித்த பேட்டி விவரம்: இரண்டொரு நாட்களாக தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற செய்தி வந்து கொண்டு இருக்கிறது. அந்த செய்தி தவறானது. தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களுக்கான பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள். அப்போது இதுகுறித்து மக்களின் கருத்தைக் கேட்டு தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருக்கிறது. அந்த அடிப்படையில் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நீதிமன்ற நடவடிக்கையினால் பொதுமக்களிடம் பஸ் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்து நீதிமன்றத்திடம் தான் வழங்கப்படும்.அங்கு அரசினுடைய கருத்தை கேட்கும் போது பொது மக்களுக்கு சுமையில்லாத வகையில் தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்து வைக்கப்படும். ஏற்கனவே மின் கட்டணம் உயர்வு இருக்கும் என்று செய்தி இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலின் கட்டண உயர்வு இருக்காது என்று தெளிவுபடுத்தச் சொன்னார், அதை தெளிவுபடுத்தினோம். அந்த வகையில் தான் பஸ் கட்டணம் உயர்த்தப்படாது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V. SRINIVASAN
ஜூன் 03, 2025 16:39

மே 2026 வரை உயர்த்தமாட்டார்கள் தேர்தல் வருகிறதே


A.Gomathinayagam
ஜூன் 03, 2025 14:08

கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று .தரத்தை உயர்த்தி அதிகமான பேருந்துகளை இயக்கலாம் மதுவிற்கு தினமும் சில நூறு செலவழிபவர்களுக்கு இது சுமையே அல்ல


Matt P
ஜூன் 03, 2025 11:41

இலவசமா பெண்களுக்கு பயணம் கொடுத்து மேலும் போக்குவரத்து துறைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இப்போது ஆண்களின் கட்டணத்தை ஏற்றுவேன் என்றால் இதை விட மட்டமான அரசு இயல் உலகத்தில் வேறு எங்கும் பார்க்கமுடியாது என்பதை முட்டா தனமான இந்த செயல்கள் நிரூபிக்கிறது. கடவுளை நம்புபவன் முட்டாள் என்று சொன்னவர்கள் வழி வந்தவர்கள் அடி முட்டாள்கள் என்று நிரூபிக்கிறார்கள்.