உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை; புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை; புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது. அதில் புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிகிறது.தமிழக பட்ஜெட் மார்ச் 14ம் தேதியும், மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் ஆகிறது. அதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது. கடந்த டிசம்பர் முதல் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதை இறுதி செய்யும் பணிகள் வேகம் பெற்றுள்ளன. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப்.25) கூடுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் நடக்கிறது. கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்குவது தொடர்பான ஆலோசனைகள் பெறப்பட்டு அதற்கான ஒப்புதல்கள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anand
பிப் 25, 2025 11:02

என்னென்ன திட்டங்களை தீட்டலாம் என.....


Kasimani Baskaran
பிப் 25, 2025 10:26

மோடி, அமித்ஷா மட்டுமல்லாது ஜனாதிபதியையும் பதவிநீக்கம் செய்ய தீர்மானம் போடாமல் இருந்தால் நல்லது. கலைக்கப்படவேண்டிய ஆட்சி தொடர்வது துரதிஸ்டவசமானது.


RAMAKRISHNAN NATESAN
பிப் 25, 2025 09:27

அதில் புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிகிறது ...... என்ன தொழில் ? முடிச்சு அவிழ்த்தல் மற்றும் மொ மாறி தொழில்கள்தானே ?


Arunkumar,Ramnad
பிப் 25, 2025 09:08

ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக ஊழல் செய்வதை தவிர வேறு எந்த திட்டத்தையும் செயல் படுத்தவில்லை. ஆட்சி முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் போது இப்போது ஒப்புதல் தருகிறார்களாம் யாரை ஏமாற்ற இந்த பித்தலாட்ட வேலை? இப்போ ஒப்புதல் தந்து அதை எப்போது நிறைவேற்றுவது அதற்குள் மக்கள் இந்த திருட்டு திராவிட திமுகவை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இனிமேலும் மக்களை இது போன்ற ஏமாற்று வித்தைகள் தமிழக மக்களிடம் எடுபடாது. இதை புதிதாக அப்பா அவதாரம் எடுத்திருக்கும் ஸ்டாலினிடம் யாரவது விபரம் அறிந்த அதிகாரிகள் எடுத்து சொல்ல வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை