| ADDED : ஜன 11, 2024 01:33 AM
சென்னை:'சட்டசபை கூட்டத்தொடரின்போது, காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்' என, தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சங்க தலைவர் பெரியசாமி, பொதுச் செயலர் தனசேகரன் விடுத்த அறிக்கை:டாஸ்மாக் மது கடைகளில், 25,000 ஊழியர்கள், 20 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். தமிழக அரசின் பணி நிரந்தர சட்டப்படி, இரு ஆண்டு களில், 480 நாட்கள் பணிபுரிந்த ஊழியர்கள், பணி நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால், டாஸ்மாக் பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் சட்டசபை கூட்ட தொடரின்போது, சென்னையில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.