உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டாஸ்மாக்கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகளும், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.அதன் அடிப்படையில், கடந்த மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இச்சோதனையில், டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.இந்நிலையில் இந்த வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த வெங்கடாசலபதி என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறப்பட்டது.இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய, மாநில அரசுகள், சி.பி.ஐ., அமலாக்கத்துறை, டாஸ்மாக் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

துர்வேஷ் சகாதேவன்
மே 14, 2025 21:44

கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். 2017 முதல் 2021 வரை அடிமைகள் ஆட்சி தான் அந்த காலத்தில் தான் 30 க்கு மேற்பட்ட FIR உள்ளது , உடனே சிபிஐ க்கு மாற்றவும் .


ஆரூர் ரங்
மே 15, 2025 11:19

பங்காளிகள் இருவருமே சேர்ந்து அடித்த கூட்டுக் கொள்ளை. சப்பைக்கட்டு வேண்டாமே.


துர்வேஷ் சகாதேவன்
மே 14, 2025 21:29

என்னடா இது 100000 கோடி முதலில் தெரிவிக்க பட்டு பின்னர் 1000 கோடியா சுருங்கி ,49 FIR இல் admk காலத்தில் மட்டும் FIR என்று சொல்லப்பட்டு வந்த விவகாரம் இப்போது மத்திய மாநில அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கோர்ட் சொல்லுகிறது , அகட ஏமி லேது என்று தெரிகிறது , பாவம் யாரையோ மிரட்ட கப்பம் கட்டியவர் அலற நல்ல கூத்து


GMM
மே 14, 2025 21:07

3 வழக்குகள். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, மத்திய அமுலாக்க துறை மற்றும் தனி நபர் பொது நல வழக்கு. வழக்கு நிர்வாக நடவடிக்கையின் கீழ் உள்ளது. செலவு இல்லாத கொஞ்சம் ஊழல் உடைய நிர்வாக நடவடிக்கை முடியும் முன், நீதிமன்றம் வழக்கு ஆக்கினால், வியாபாரம் ஆகிவிடும். மத்திய அரசு தன்னை காக்க போராடுகிறது. இடையில் என்ன பதில் சொல்வது? அரசு நிர்வாகத்தை மிரட்டுவது போல் உள்ளது.


Raghavan
மே 14, 2025 21:01

மாநில அரசு விசாரனை எல்லாம் உப்புக்கு சப்பாணி.சிபிஐ விசாரணை தான் நல்லது.


துர்வேஷ் சகாதேவன்
மே 14, 2025 21:39

, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். 2017 - 2021 ADMK அட்மட் காலத்தில் FIR தான் அதிகம் ஆகவே சிபிஐ விசாரணை தேவை. அப்ப தான் தங்கமணி ஏன் மாதா மாதம் டெல்லி சென்றார் என்கிற விவரம் வரும்.


மீனவ நண்பன்
மே 14, 2025 20:43

கோர்ட் தானாக முடிவெடுக்க வேண்டாமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை