உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தத்கால் முன்பதிவு முறை; 5 கோடி பயனருக்கு ஐ.ஆர்.சி.டி.சி., இ - மெயில்

தத்கால் முன்பதிவு முறை; 5 கோடி பயனருக்கு ஐ.ஆர்.சி.டி.சி., இ - மெயில்

சென்னை: தத்கால் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து, ஐந்து கோடி பயனாளர்களுக்கு, 'இ - மெயில்' வாயிலாக, ஐ.ஆர்.சி.டி.சி., தகவல் அனுப்பி வருகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், 82 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.

தத்கால் டிக்கெட் முன்பதிவு முறையில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றம், அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. வரும் 1ம் தேதி முதல், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலியில், ஆதார் பதிவு செய்தவர்களால் மட்டுமே, தத்கால் முன்பதிவு செய்ய முடியும். வரும் 15ம் தேதி முதல், ஆதாருடன் ஓ.டி.பி., எனும் ஒருமுறை பயன்படும் குறியீடு எண் அடிப்படையிலான உறுதிப்பாடும் கட்டாயமாக்கப்படுகிறது.அதிகாரபூர்வ ரயில் டிக்கெட் முன்பதிவு கவுன்டர்கள், அங்கீகாரம் பெற்ற முகவர்கள் வாயிலாக எடுக்கப்படும் தத்கால் டிக்கெட்டுகளுக்கும், ஓ.டி.பி., உறுதிப்பாடு அவசியம். இது குறித்த விபரங்களை இ - மெயில் வாயிலாக, தன் ஐந்து கோடி பயனாளர்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி., அனுப்பி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை