உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.10,000 கோடியை தாண்டிய வரி வசூல்

ரூ.10,000 கோடியை தாண்டிய வரி வசூல்

வணிக வரித்துறை இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை நந்தனம் வணிக வரி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தின் போது, வணிகர் நல வாரியம் சார்பில், திருவாரூரை சேர்ந்த சாந்திதேவி மற்றும் குளித்தலையை சேர்ந்த சிவகுமார் ஆகியோருக்கு குடும்ப நல நிதி உதவியாக, தலா 3 லட்சம் ரூபாய் காசோலையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.பின், அமைச்சர் மூர்த்தி கூறுகையில், ''பதிவுத்துறை நடப்பு, 2023 - 24ல் பிப்ரவரி மாதம் வரை, 1.16 லட்சம் கோடி ரூபாய் மொத்த வரி வருவாய் ஈட்டியுள்ளது. பிப்ரவரியில் மட்டும் வரி வருவாய், 10,000 கோடி ரூபாயை தாண்டி, 11,383 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ