உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., மாநாட்டுக்கு தடபுடல் ஏற்பாடுகள்; பக்கா பிளான் செயல்படுத்தும் விஜய்!

த.வெ.க., மாநாட்டுக்கு தடபுடல் ஏற்பாடுகள்; பக்கா பிளான் செயல்படுத்தும் விஜய்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க வசதியாக, 16 குழுக்களை அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.வரும் 2026ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, முழுவீச்சில் கட்சிப் பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த விஜய், அக்டோபர் 27ம் தேதி கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் என அறிவித்தார். இந்த மாநாட்டில் தான் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.இந்த அறிவிப்பை தொடர்ந்து, மாநாட்டுக்கு பந்தக்கால் நடுவது முதல் நிர்வாகிகளுக்கு கட்சி வேஷ்டி அனுப்புவது வரையில் உள்ள அனைத்து பணிகளும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே, மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், மாநாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் செயல்வடிவக் குழுக்களை அமைத்து த.வெ.க., தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். முழு மாநாட்டு ஒருங்கிணைப்புக்குழு, பொருளாதாரக்குழு, சட்டநிபுணர்கள் குழு, வரவேற்பு குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு, சுகாதாரக் குழு, மேடை ஒருங்கிணைப்புக்குழு, இருக்கை மேலாண்மை குழு, உபசரிப்புக்குழு, தீர்மானக் குழு, திடல்/பந்தல் அமைப்பு உதவிக்குழு, மகளிர் பாதுகாப்புக்குழு, பாதுகாப்பு மேற்பார்வை குழு, வாகன நிறுத்தக்குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழு, உள்ளரங்க மேலாண்மைக் குழு என மொத்தம் 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுக்களுக்கும் தனித்தனியாக தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Devanand Louis
அக் 12, 2024 22:30

மதுரை திருமங்கலம் ரயில்வே பாலம் வேலைகள் நடைபெறுகிறது , மாற்று பாதை சரியான விதிகளின் மற்றும் உரிய கட்டமைப்புகள் பின்பற்றாமல் -நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு மாற்றுப்பாதை வெறும் மண்னபாதைபோட்டு மேடுபள்ளங்கள் உள்ளன , கனரக வாகனங்கள் செல்லும் இந்தப்பாதையில் பொதுமக்களின் பயம் அதிகமுள்ளது , இப்பொழுது மழைகாலமென்பதால் ஆங்காங்கே மழைதண்ணீர்தேங்கி பாதுகாப்பற்ற சூழலுள்ளது - இதனால் நோக்கல்ஸ்விபத்துகள் மற்றும் மரணங்களுக்கு நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர்தான் பெறுப்பேற்கவேண்டும் .தினமலரின் உதவிகள் வேண்டும்


Ms Mahadevan Mahadevan
அக் 12, 2024 22:16

மாநாடு முடிந்ததும் விஜய் மாநாட்டு வர்வு செலவு கணக்கை வெளியிட்டு மற்ற கட்சிகளிடம் இருந்து தான் வேறு பட்ட நபர் என்பதை வெளிப்படுத்த வேண்டும்


Ms Mahadevan Mahadevan
அக் 12, 2024 22:10

மற்ற கட்சிகள் சமூக நீதி என்று சொல்லி ஏமாற்றுவது போல் இல்லாமல் சம உரிமை சம வாய்ப்பு என்று அறிவித்து அதை ஒழுங்காக கடைபிடித்தால் மக்கள் விஜய்யை ஏற்றுக் கொள்வார்கள்.


Narayanan Sa
அக் 12, 2024 21:06

ஆரம்பம் முதல் அனைத்து மக்களையும் சாதி மதம் பாராமல் ஒரே கண்ணோட்டதுடன் பார்த்தால் மக்கள் ஏற்றுக்கொள்வர் .இல்லை என்றால், இப்போது மக்கள் எந்த புதிய கட்சியியும் ஏற்று கொள்வதாக இல்லை


c.chandrashekar
அக் 12, 2024 20:55

விஜயின் மார்க்கெட் எருக்கு முகம் ஆகி இரண்டு வருடம் ஆகிவிட்டது அதை உணர்ந்தே சினிமாவில் தன்னை பல படுத்தி கொள்ளவே அவர் அரசியலுக்கு வருகிறார் , விஜகாந்துக்கு மக்களிடம் மிக நல்ல பெயர் இருந்தது.அவராலே நிற்க முடிய வில்லை ,சுயநலத்தோட வரும் விஜய் வெல்ல முடியுமா காலம் பதில் சொல்லும்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 12, 2024 20:43

திமுகவோடு ஒருங்கிணைப்பு நடத்த தனி குழு. கமல்ஹாசன் வழியில் திமுகவோடு நான்கு ஆண்டுகள் கழித்து இணைய ஒரு குழு. வரும் சட்ட மன்ற தேர்தலில் ஓட்டுகளை சிதறச்செய்து திமுகவை வெற்றி பெற வைக்க ஒரு குழு இவைகளை முன்னரே ஆரம்பித்து விட்டாரோ?


Ramesh Sargam
அக் 12, 2024 20:41

ஆடல், பாடல், விருந்து எல்லாம் உண்டு.


Ramesh Sargam
அக் 12, 2024 20:40

சினிமாவில் சம்பாதித்த பணத்துக்கு டாக்ஸ் கட்டுவதை தவிர்க்க இப்படி செலவு.


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 12, 2024 20:15

17 வதாக குழுக்கள் ஒருங்கிணைப்பு குழு இல்லையே ரொம்ப குழும்பிட்டாங்க, சாரி, கொழம்பிட்டாங்க...


sundarsvpr
அக் 12, 2024 20:10

தி மு க தலைவர் கட்சி ஹிந்து விரோத கட்சி இல்லை என்று கூறியுள்ளார் கட்சியில் பெருபான்மையோர் ஹிந்துக்கள். . ஆனால் தலைவர்மட்டும் ஹிந்து விரோத மனப்பான்மை உள்ளவர். கட்சியில் அவர் துணைவியாரும் அடக்கம். இவர் திருக்கோயில் திருக்கோயிலாக செல்கிறார். விஜய் எந்த மதம் என்று எல்லோருக்கும் தெரியும். உண்மைதான் மக்கள் மனசில் எடுபடும் . உங்கள் தைரியம் எப்படி பட்டது மக்கள் அறிவர்.


முக்கிய வீடியோ