உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு

கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 54 ஆக அதிகரித்தது. இறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுகின்றனர்.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 150க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு, கண்பார்வை குறைவு மற்றும் காது கேளாமையால் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் அபாய கட்டத்தில் உள்ளதால், அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. இன்று (ஜூன் 22) காலை நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 30 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 17 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர் உட்பட 54 பேர் உயிரிழந்தனர்.கள்ளச்சாராயம் குடித்தவர்கள் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர்களும், புதுச்சேரி ஜிப்மர், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. அதில் 21 பேரது நிலைமை கவலைக்கிடமாக தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

raja
ஜூன் 22, 2024 12:13

மது விலக்குத்துறை மதுவை எப்படியெல்லாம் விற்று காசு பார்க்கலாம் என்று நினைக்குறது இதில் எங்கே தலைமுறைகள் படித்து முன்னேறுவது? அரசே வீதிக்கு வீதி கடையை திறக்கிறது அப்புறம் எப்படி படித்து முன்னேறுவார்கள்?


prathab
ஜூன் 22, 2024 08:37

விடியல் ஆட்சி வேணும்னு ஓட்டு போட்டவர் எல்லாம் ஓடிட்டாங்க..


raja
ஜூன் 22, 2024 08:09

திருட்டு திராவிட மாடல் ஆட்சியை கொண்டு வந்த தமிழனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் சாவுங்க


duruvasar
ஜூன் 22, 2024 08:07

திராவிட மாடல் அரசு கொடிகட்டி பறக்கிறது. எது எப்படி இருந்தாலும் தமிழக மாக்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள். அதுதான் திராவிடனின் சிறப்பம்சம்.


R Kay
ஜூன் 22, 2024 08:06

இந்தஆட்சி கலைக்கப்பட வேண்டும். விடியலு ஆட்சி நடத்திய லட்சணத்தில் எந்த அனுதாப அலையும் வீசப்போவதில்லை.


Priyan Vadanad
ஜூன் 22, 2024 07:47

சாராயம் காய்ச்ச துணையாயிருந்த கவுன்சிலர், வார்டு மெம்பர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய தலைவர் எவருமே கைது செய்யப்படவில்லையா? அரசியல்வாதிகளை தப்பிவிடுகிற நிலை மாறினால் மட்டுமே பெரும்பாலான தவறுகளை தடுக்க முடியும். கட்சிக்காக அரசு பணியாளர்களை மட்டுமே தண்டிப்பது முறையல்ல. சாராயம் காய்ச்ச துணையாயிருந்த கவுன்சிலர், வார்டு மெம்பர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய தலைவர் இவர்களை தண்டித்தால் கட்சிக்கு நிதியும் ஓட்டும் கிடைக்காது என்பதால் இவர்களை அரசு தப்ப விடுகிறது. மக்கள் கொதித்தெழுந்தால் மட்டுமே தவறுகள் தடுக்கப்படும். இதில்வேறு தவறு செய்து செத்துப்போனவர்கள் ஒவ்வொருவருக்கும் பத்து லட்சம் நிதியுதவியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் செய்யும் போது, சாராயம் காய்ச்சுபவர்களும் விற்பவர்களும் குடிப்பவர்களுக்கு மறைமுகமாக ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அரசியல் தலைவர்களுக்கு தெரியாமலா இருக்கும்.


Priyan Vadanad
ஜூன் 22, 2024 07:44

உயிரிழப்புக்கு நிறைய பணம் கிடைக்கும் என்றால் இதுபோல இன்னும் நடக்கும். இந்த செய்திக்கு பத்திரிகைகளில் இன்னும் இடம் கொடுக்க வேண்டுமா? அடுத்த கட்டத்துக்கு போவதுதான் நல்லது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி