உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சம்பளம் பாக்கி வாங்கித்தர ரூ.1 லட்சம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் கோவில் செயல் அலுவலர்

சம்பளம் பாக்கி வாங்கித்தர ரூ.1 லட்சம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் கோவில் செயல் அலுவலர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவாரூர்: திருவாரூரில் பொங்கு சனீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஜோதி, அதே கோவிலில் கிளர்க் ஆக பணிபுரியும் சசி குமாரிடம் ரூ.1 லட்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் செயல் அலுவலராக ஜோதி, 42, பணிபுரிந்து வருகிறார். இதே கோவிலில் கிளர்க் ஆக சசிகுமார், 49, என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு துறையில் இருந்து வரவேண்டிய ரூ.2 லட்சம் சம்பளம் நிலுவையில் இருந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b00j5fut&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் சம்பளம் பாக்கியை பெற்று தரும்படி, செயல் அலுவலர் ஜோதியை நாடியுள்ளார். அவர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் சம்பளம் பாக்கி ரூபாய் சசி குமாருக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று( ஏப்ரல் 03) மன்னார்குடியில் உள்ள ஆதி விநாயகர் கோவிலில், ஜோதி ஆய்வு மேற்கொண்டு இருக்கும்போது, சசிகுமார் ரூ.1 லட்சம் லஞ்சம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., நந்தகோபால் தலைமையிலான போலீசார் ஜோதியை கையும், களவுமாக கைது செய்தனர். இவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Raghavan
ஏப் 04, 2025 11:47

இவர் எப்படி 50% கேட்கிறார் ஒருவேளை அமைச்சர்கள் எல்லாரும் முன்பு வாங்கியதைவிட இப்போது % ஏற்றிவிட்டார்களோ. ஆரம்பித்து வைத்தவருக்கு ஊர் பூராவும் சிலை.


Palanisamy T
ஏப் 04, 2025 04:34

முன்பு சிங்கையில் ஒரு கோவிலில் இப்படிப்பட்ட ஏற்கமுடியாத நடந்தவொரு சம்பவம். ஊழல் நடக்கவில்லை. நடந்தது அர்ச்சகர் செய்த தவறால், அவர்கள் ஏற்பட்ட நம்பிக்கை மோசடியால் நடந்த குற்றத்திற்காக அர்ச்சகர் 6 வருட சிறை தண்டனை. அர்ச்சகர் தமிழகத்தைச் சேர்ந்தவர். கோவில் நிர்வாகத்தினர் அம்மன் நகைகளை நம்பிக்கையோடு பாதுகாக்கும் பொறுப்பை அர்ச்சகரிடம் கோவில் நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். அவர் கோவிலுக்கு தெரியாமல் நகைகளை அடகுக் கடையில் வைத்து வட்டி தொழில் செய்து சம்பாதித்தார். செய்தது தவறுதான். நிர்வாகத்தினர் திடீர் சோதனையில் மாட்டிக் கொண்டார். நம்மை பொறுத்த மட்டில் புனிதமாக அம்மன் நகையை அவர் மாசுப்படுத்தியது மன்னிக்க முடியாத தவறு. இப்படித்தான் தமிழகத்திலும் எங்கும் நகைகள் பணப்புழக்கங்கள் உள்ள கோவில்கள் நிறைய நடக்கின்றன. கோயில்களில் நடக்கும் தவறுகளை தமிழக அரசும் கோவில் விதிமுறைகளில் கடுமையாக நடந்துக் கொள்ளவேண்டும். நடக்கும் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசு மேற்க்கொள்ள வேண்டும். கோவில்களில் நல்ல மேம்பாடுகள் வளர்ச்சிகள் வேண்டு மென்றால் இதுதான் வழி. மேலும் மக்கள் பொது வாக்களிப்பின் போது வரும் காலங்களில் நல்லாட்சியை தேர்வுச் செய்வதை மக்கள் உறுதிச் செய்யவேண்டும். கோவில் மேம்பாடு, வளர்ச்சிக்கும் இதுதான் சிறந்தவழி. நாளை நாடும் மக்களும் நல்ல பயன்கள் பெறுவர்.


Matt P
ஏப் 04, 2025 00:34

லஞ்சத்தை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தனவருக்கு தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை சிலை வைச்சா... இப்படி தான் பணக்காரர். நாமளும் ஆரம்பிச்சிர வேண்டியது தான் என்று தான் தொடருவார்கள்.


Barakat Ali
ஏப் 03, 2025 20:58

ஒண்ணும் ஆவாது .......... மிஞ்சிப்போனா ஒருவாரம் சஸ்பெண்டு ..... அநேகமா வசூலுக்காக பெண்டிங் வெச்சதே அந்தம்மாவாத்தான் இருக்கும் ....... கேட்டா துட்டு மாண்புமிகு மற்றும் துக்ளக்கார் வரைக்கும் போவுது ன்னுவாங்க .....


M S RAGHUNATHAN
ஏப் 03, 2025 20:53

முதலில் இந்த செயல் அலுவலருக்கு பணி ஆணை இருக்கிறதா ? அதை யார் கொடுத்தார்கள் ? இவர் இட ஒதுக்கீடு ஜாதியை சேர்ந்தவரா என்று சொல்லவும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 03, 2025 20:28

சம்பள பாக்கி என்றால் எப்படி பாக்கி. அப்படியே பாக்கி இருந்தாலும் இரண்டு லட்ச ரூபாய் வரை எப்படி பாக்கியானது ? இந்த சாதாரண செயல் அலுவலருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை விடுவிக்க அதிகாரம் உள்ளதா ?


sankaranarayanan
ஏப் 03, 2025 18:49

பேஷ் பேஷ் எங்கே எங்கள் துறை அமைச்சர். இப்படி எங்கள் துறையில் நடப்பதை கண்டுகொள்ளவே மாட்டார்.இது சகஜப்பா என்றே சொல்லிவிடுவார்


Palanisamy T
ஏப் 03, 2025 18:46

ஒரு ரூபாய் வாங்கினாலும் லஞ்சம் லஞ்சம்தான். இவர்களையெல்லாம் சட்டம் கடுமையாக மற்றவர்களுக்குப் பாடமாக தண்டிக்கவேண்டும். இப்படி பெருந் தொகை கேட்கின்ற அளவிற்கு இவர் நடந்ததை பார்க்கும் போது கோவில் நிர்வாகத்தினருக்கு தெரியாமலா யிருக்கும். தெரிந்தும் கோவில் நிர்வாகத்தினர் கண்டுக் கொள்ளாமலிருந்தது ஏன்? சிந்திக்க வேண்டிய விஷயம்


l.ramachandran
ஏப் 03, 2025 18:16

பொட்டு வெச்சிருக்காங்க. அதனால தி மு க இல்ல.


Matt P
ஏப் 03, 2025 22:41

நெத்தியில் நிறைய பூசி இருக்காரே சேகரு அவரும் திமுக இல்லை. நெத்தியில பூசி இருக்கும் செந்திலும் திமுக இல்லையஆ? பூச்சு எல்லாம் நல்லவன்னு காட்டிக்க தான்.


Palanisamy T
ஏப் 03, 2025 18:03

லஞ்சம் கேட்டு வாங்கும் கரங்கள் கோயில் செயல் அலுவர். வெக்கக் கேடான செயல். இவரைப் போன்று கோயில்களில் இன்னும் எத்தனைப் பேர்கள் உள்ளனர். எல்லோரையும் பிடிக்கமுடியுமா? தண்டிக்கமுடியுமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை