உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மேல்மருவத்துாரில் 28 ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம்

 மேல்மருவத்துாரில் 28 ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம்

சென்னை : தைப்பூச விழாவையொட்டி, மேல்மருவத்துாரில், டிசம்பர், 14 முதல் 31ம் தேதி வரை, 28 விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: மேல்மருவத்துாரில் வரும் டிசம் பர், 14 முதல் பிப்., 2ம் தேதி வரை தைப்பூச விழா நடக்கிறது. பயணி யர் வசதிக்காக, விரைவு ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, 28 விரைவு ரயில்கள் இரு மார்க்கமாக, டிச., 14 முதல் டிச., 31ம் தேதி வரை, மேல்மருவத்துாரில் நின்று செல்லும். மதுரை செல்லும் வைகை, பாண்டியன் ரயில்கள், தஞ்சை செல்லும் உழவன், செங்கோட்டை, கொல்லம் செல்லும் ரயில்கள், டில்லியில் இருந்து கன்னியாகுமரி வரும் ரயில்கள் இங்கு நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ