உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரி 6 சதவீதம் உயர்வு: அறிவிப்பே வெளியிடாமல் அமலுக்கு வந்தது

நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரி 6 சதவீதம் உயர்வு: அறிவிப்பே வெளியிடாமல் அமலுக்கு வந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசின் உத்தரவு அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மீண்டும் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்தியுள்ளன. அறிவிப்பே வெளியிடாமல், இந்த வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, பிரதான நிதி ஆதாரமாக, சொத்து வரி வசூல் உள்ளது. பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், 2022ல் ஒட்டு மொத்தமாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.வீடுகளின் பரப்பளவு அடிப்படையில், 25 முதல், 100 சதவீதம் வரை, சொத்து வரி உயர்த்தப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின் ஏற்றப்பட்டதால், பொதுமக்கள் இதை சகித்துக் கொண்டனர். அதன்பின், 2023ல் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு, 6 சதவீதம் வரை, உள்ளாட்சி அமைப்புகளே, சொத்து வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியது.இதன் அடிப்படையில், பெரும்பாலான நகர்ப்புற உள்ளாட்சிகள், கடந்த ஆண்டில் சொத்து வரியை, 6 சதவீதம் அளவுக்கு உயர்த்தின. தற்போது, 2025 - 26ம் நிதியாண்டு துவங்கியுள்ள நிலையில், வெளிப்படையான அறிவிப்பு இல்லாமல், உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்தி உள்ளன. இது, சொத்து வரி செலுத்த செல்வோரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, சமூக ஆர்வலர் பி. விஸ்வநாதன் கூறியதாவது:பொதுவாக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, சொத்து வரியை சீரமைப்பது ஏற்றுக்கொள்ளும் நடைமுறையாக உள்ளது. அதன்பின், ஒவ்வொரு ஆண்டும், 6 சதவீதம் உயர்த்துவது, வீட்டு உரிமையாளர்களுக்கு, கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக உள்ளது. இவ்வாறு ஆண்டுதோறும் வரியை உயர்த்தினால், ஐந்து ஆண்டுகளில் சொத்து வரி, 30 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து விடும். அதன்பிறகு மீண்டும் ஒட்டுமொத்த சீரமைப்பு என்ற பெயரில், புதிய விகிதங்கள் நிர்ணயிக்கும் போது, வீட்டு உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.சொத்து வரியை தாமதமாக செலுத்துவோருக்கு, அபராதமாக விதிக்கப்படும் வட்டியை, ஒரு சதவீதத்தில் இருந்து, 0.5 சதவீமாக குறைக்க, அரசு முன்வந்துள்ளது. ஆனால், அளவு குறைபாடு காரணமாக, விதிக்கப்படும் அபராதங்கள் விஷயத்தில், வெளிப்படைத்தன்மை இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் விதிக்கப்படும் சொத்து வரி விகிதங்கள், எதன் அடிப்படையில் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை, அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

மெய்பொருள்நாதன்
மே 03, 2025 19:47

அவுக என்ன செய்வாக? விலை வாசி ஏறுதில்லே? வரியை ஏத்தித்தானே ஆக வேண்டும்? ஆட்சிக்கு வரும்போது எதை வேண்டுமானாலும் சொல்லுவோம் மக்களே. மீண்டும் 2026 லிலும் எங்களுக்கு தானே உங்கள் ஓட்டு?


ஆரூர் ரங்
மே 03, 2025 12:32

மாநகராட்சி எல்லா சொத்து க்களின் மதிப்பை ட்ரோன்களின் மூலம் அளவீடு செய்தார்கள். நியாயமான அளவிற்கு வரி அளவை மாற்றுவார்கள் என எதிர்பார்த்தபோது திடீரென அந்த மதிப்பீட்டை ரத்து செய்து உத்தரவிட்டார்( கழக ஆட்களின் நலன் கருதி?) அமைச்சர். ஆக எங்க வீட்டுக்கு பட்டாவின்படி ஒரு விஸ்தீரணம். பத்திரத்தில் ஒரு விஸ்தீரணம். வரி ஆவணத்தில் வேறு ஒரு பரப்பளவு. மோசமான சாலை, வெள்ள நீர், சாக்கடை பிரச்னை புகார்களுக்கு மட்டும் பதிலில்லை. 6 மாதமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது என்பதை ஆய்வக அறிக்கையை காண்பித்தால் கூட ஏற்க மறுக்கும் மாநகராட்சி. இனிமேல் வரிகொடா இயக்கம்தான் தீர்வா?.


SIVA
மே 03, 2025 11:01

சொத்து வரி உயர்வால் வீடு வாடகை உயரும் , அதில் நேரடியாக பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் ஏழை மக்களே , இந்த வரி மக்கள் நலத்திட்டங்களுக்கு உருப்படியா போகவும் போவது இல்லை ....


M Sekhar
மே 03, 2025 10:40

நீங்க ஒரு விஷயம் கவனிக்கல. இந்த மாதிரி உயர்த்துவது ஒன்றிய அரசு சொல்வதால் தான் . மாநில அரசு குறைக்காது தான் நினைக்கிறது. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தான் இவ்வாறு உயர்ரத்த வைக்கிறது. அறிவிப்பு வெளியிடாமல் என் உயர்த்துகிறீர்? ஒன்றிய அரசு அப்படித் தான் செய்ய சொன்னது.


SIVA
மே 03, 2025 14:24

மத்திய அரசு மூன்று மொழி பயில வேண்டும் என்று சொல்கின்றது , அதை செயல் படுத்தினால் நீங்கள் நடத்தும் டுபாக்கூர் CBSE பள்ளிக்கூடத்தில் வருமானம் குறையும் , நீட் தேர்வை ஆதரித்தால் மெடிக்கல் காலெட்ஜ் வருமானம் பாதிக்கும் அதையெல்லாம் எதிர்ப்பீங்க , இந்த வரி உயர்வை அமல்படுத்த முடியாது என்று சொல்ல வேண்டியது தானே உங்கள் இத்து போன மாநில சுயாட்சி இது தானா ..... மசோதா அனுமதி தர வில்லை கோர்ட் போனீங்க இதற்கும் முடியாது என்று சொல்லி கோர்ட் போக வேண்டியது தானே ....


Anantha Padmanaban K.R.
மே 03, 2025 10:07

இந்த திராவிட மாடல் அராஜகத்தால் பாதிக்கப்படுவது சாதாரண நடுத்தர மக்கள் இவர்கள் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மூன்று முறை சொத்து வரி உயர்ந்துள்ளது. இதை எதிர்க்கட்சிகள் சரியாக அரசியல் செய்ய தெரியவில்லை மக்கள் மன்றத்தில் கொண்டு சென்று திமுகக்கு எதிராக பிரச்சாரம் செய்ய தெரிவதில்லை. அதுதான் இதில் இருக்கும் சங்கடமே. இந்த அராஜகங்களில் இருந்து தமிழக மக்களை இறைவா இந்த திராவிட மாடல் ஆட்சியில் இருந்து எங்களை காப்பாற்று.


Anantha Padmanaban K.R.
மே 03, 2025 10:03

இதனால் பாதிக்கப்படுவது யார் என்றால் நடுத்தர மக்களே. இந்த திராவிட மாடலுக்கு ஓட்டு போட்ட பெரும்பாலோனரால் ஓட்டு போடாத மற்ற அனைவருமே அனுபவிக்க நேரிடுகிறது. இறைவா இந்த திராவிட மாடலின் துன்பத்தில் இருந்து எப்பொழுது எங்களை மீட்பாய்


பாமரன்
மே 03, 2025 09:38

இதாவது சொத்து வரி... காலங்காலமாக இருந்துவரும் முறை... அதை ஓட்டுப்பிச்சைக்காக வெகுகாலம் மாற்றியமைக்காமல் இருந்துட்டு இப்போ சீரமைக்க முயற்சிக்கும் போது குரல் கொடுக்கும் ஊசி மணிகள் ராங்கிடுகள் தான் இருபது வருடங்களுக்கு மட்டுமே வசூல் செய்ய வேண்டிய சுங்க கட்டனத்தை அந்த காலம் முடிஞ்சும் வருடாவருடம் ஏற்றி வருவதற்கு முட்டு குடுத்தவர்கள் ... இப்போது சொத்து வரி ஏற்றுவது கூட எந்த அடிப்படையில் அப்பிடின்னு தெர்ல... ஆக்சுவலா மத்திய அரசின் சட்டப்படி தான்னு கூட சொல்றாங்க... அந்த உண்மை இங்கே வராது... விடுவோம்... எனக்கு சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மற்றொரு மாநகராட்சியில் ஃப்ளாட் இருக்கு. சென்னையில் உள்ளதை விட முப்பது சதவீதம் பரப்பளவு அதிகம் உள்ளது அடுத்த ப்ராப்பர்டி... ஆனால் சென்னையில் உள்ளதை விட ஐந்து மடங்கு அதிகமாக வரி போடுறாங்க... அங்கே குறைவுன்னு கம்ப்ளைண்ட் பண்ணனுமா அல்லது இங்கே அதிகம்னு கம்ப்ளைண்ட் பண்ணனுமா...??? எங்க போயி முட்டிக்கறதுன்னு பாசி மணி ஐடியா குடுக்கலாம்... வெளிப்படைத்தன்மை சுத்தமாக இல்லை... இது மட்டுமல்லாமல் சுங்க கட்டணம் பெட்ரோலிய பொருட்கள் விலை மாதிரி பாமரன் யூஸ் பண்ணும் பலவற்றை அரசுகள் நோகாமல் வசூல் கும்பிட்டு காலத்தை ஓட்டுதுக... இதுக்கு சப்போட்டா பீஸ்கள் வேறு...


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
மே 03, 2025 08:25

ஓன்றிய அரசின் பதினைந்தாவது நிதி குழு விதித்த நிபந்தனை இது இதில் கையெழுத்திட்ட தவழப்பாடி வேலுமணியை கேட்க மாட்டார்கள் திமுக மீது மட்டும் வன்மத்தை வெளியிடுவார்கள் வாழ்க பத்திரிகாதர்மம்


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 03, 2025 07:38

சொத்தையெல்லாம் ஜி ஸ்குயர் க்கு எழுதி வைத்துவிட்டால் நமக்கு வரியே கிடையாது. அவங்களே வரி தள்ளுபடி பண்ணிக்குவாங்க. ஐயா. ஜாலி.


raja
மே 03, 2025 07:14

அப்புறம் என்ன தமிழா ஸ்டாலின் தான் வந்தாரு... விடியல் தான் தந்தாரு என்று ஸ்வீட் எடுத்து கொண்டாடி குதுகூலமா இரு..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை