உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாம் தமிழர் கட்சிக்கு சென்ற அ.தி.மு.க., - பா.ஜ., ஒட்டுக்கள் 

நாம் தமிழர் கட்சிக்கு சென்ற அ.தி.மு.க., - பா.ஜ., ஒட்டுக்கள் 

சென்னை:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., ஓட்டுக்களில் கணிசமான அளவு, நாம் தமிழர் கட்சிக்கு சென்றுள்ளது.ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், தி.மு.க., 1,15,709 ஓட்டுக்கள் பெற்று, 91,558 ஓட்டுக்கள் வித்தாயத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி, 24,151 ஓட்டுகள் பெற்றது. இது கடந்த இடைத்தேர்தலில் பெற்றதை விட, 13,324 ஓட்டுக்கள் அதிகம். டிபாசிட் தொகையை பெற, 25,777 ஓட்டுக்கள் தேவை என்ற நிலையில், நுாலிழையில் அதை அக்கட்சி தவற விட்டுள்ளது.கடந்த 2023 மார்ச்சில் நடந்த, இந்த தொகுதி இடைத்தேர்தலில், 1,70,563 ஓட்டுக்கள் பதிவாகின. அதில், காங்கிரஸ், 64.58 சதவீதம் அதாவது, 1,10,156 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றது. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த அ.தி.மு.க., 25.75 சதவீதம் அதாவது, 43,923 ஓட்டுக்கள் பெற்றது. நாம் தமிழர் கட்சி, 6.35 சதவீதம் அதாவது, 10,827, ஓட்டுக்ளும், தே.மு.தி.க., 0.84 சதவீதம் அதாவது, 1,432 ஓட்டுக்களும் பெற்றன. நோட்டாவுக்கு, 798 ஓட்டுக்கள் கிடைத்தன.இந்த இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., போட்டியிடவில்லை. தி.மு.க.,வும் நாம் தமிழர் கட்சியும் களத்தில் இருந்த நிலையில், 2023 இடைத்தேர்தலை விட, 6.82 சதவீதம் குறைவாகவே ஓட்டுப்பதிவு இருந்தது.கடந்த இடைத்தேர்தலை விட இப்போது, 6.82 சதவீதம் குறைவாகவே ஓட்டு பதிவாகி உள்ளது. கடந்த முறையை விட, இப்போது அதிகமாக, 6,109 பேர் நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர். கடந்த 2016ல் ஈரோடு கிழக்கில் போட்டியிட்ட பா.ஜ., 5,549 ஓட்டுக்கள் பெற்றது. ஈ.வெ.ரா.,வுக்கு எதிரான சீமானின் பேச்சால், அதில் கணிசமானோர், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.அதேபோல், அ.தி.மு.க.,வுக்கு கடந்த முறை, 43,923 ஓட்டுக்கள் கிடைத்தன. அவற்றில் ஒரு பகுதி, இப்போது சீமான் கட்சிக்கு சென்றுள்ளதை, அக்கட்சி பெற்ற ஓட்டு சதவீதத்தில் இருந்து தெரிகிறது.மேலும், 2021 சட்டசபை பொதுத் தேர்தலில், 11,629 ஓட்டுக்களும், 2023 இடைத்தேர்தலில், 10,827 ஓட்டுக்களும் பெற்ற நாம் தமிழர் கட்சி. இந்த இடைத்தேர்தலில் 24,151 ஓட்டுக்கள் பெற்றுள்ளது. இதிலிருந்து ஈ.வெ.ரா., மீதான சீமானின் விமர்சனத்தால், நாம் தமிழர் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெளிவாகி விட்டதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி