வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தி.மு.க., எதிர்ப்பு ஓட்டு த.வெ.க.,வுக்கு வரும். த வெ .க., எதிர்ப்பு ஓட்டு திமுக வுக்கு வரும்
தமிழக வெற்றிக் கழகம், தன் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு என்று ஓட்டு வங்கி இல்லை. அக்கட்சியை நம்பி கூட்டணி சென்றால், கூட்டணிக்கும் தோல்விதான் கிடைக்கும். அது அ.தி.மு.க.,வை சேர்ந்தோர் அனைவருக்குமே தெரியும். இருந்தும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இன்னொருவரை முதல்வர் ஆக்குவதற்கு, நடிகர் விஜய் கட்சித் துவங்கவில்லை. த.வெ.க., தலைமையில் வலுவான கூட்டணி அமையும். அக்கூட்டணி சார்பிலான முதல்வர் வேட்பாளராக விஜயே இருப்பார். தி.மு.க., மீதும், தமிழக அரசு மீதும் மக்கள் மிகப் பெரிய கோபத்தில் உள்ளனர். அதனால், தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகளில் 50 சதவீதத்துக்கும் மேல், த.வெ.க.,வை நோக்கி வரும். இது உறுதி.- ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர், த.வெ.க.,
தி.மு.க., எதிர்ப்பு ஓட்டு த.வெ.க.,வுக்கு வரும். த வெ .க., எதிர்ப்பு ஓட்டு திமுக வுக்கு வரும்