உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.25,100 கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறது வாரியம்

ரூ.25,100 கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறது வாரியம்

சென்னை: தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, மூன்று ஆண்டுகளுக்கு தினமும் உச்ச நேரத்தில், 500 மெகா வாட்டும், 24 மணி நேரத்துக்கு, 1,000 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்ய, மின் வாரியம் டெண்டர் கோரியுள்ளது. தமிழக மின்தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட் என்றளவில் உள்ளது. அனல் மின் நிலையங்களில் இருந்து சராசரியாக, 3,000 மெகா வாட், நீர் மின் நிலையங்களில், 1,000 மெகா வாட், எரிவாயு மின் நிலையங்களில், 150 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. இதனால், மத்திய மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. தற்போது, மூன்று ஆண்டுகளுக்கு தினமும் உச்ச நேரத்தில், 500 மெகா வாட் மின்சாரம் வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு தினமும், 24 மணி நேரம், 1,000 மெகா வாட் மின்சாரம் தமிழக நிறுவனங்களிடம் வாங்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. காலை 6:00 முதல், 10:00 மணி வரையும், மாலை 6:00 முதல் இரவு, 10:00 மணி வரையும் உச்ச நேரம் எனப்படுகிறது. உச்சநேர மின்சார விலை அதிகம். இதனால், யூனிட்டிற்கு அதிகபட்சம், 8 ரூபாய் விலை வைத்தால் கூட ஒரு நாளைக்கு, 3.20 கோடி ரூபாய் செலவாகும். எனவே, மூன்று ஆண்டுகளுக்கு சராசரியாக, 3,500 கோடி ரூபாய் செலவாகும். ஐந்து ஆண்டுகளுக்கு, 1,000 மெகா வாட் வாங்குவதால், 21,600 கோடி ரூபாய் செலவாகும். ஒட்டுமொத்தமாக, 25,100 கோடி ரூபாய்க்கு செலவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

mariyappangopinathan
நவ 12, 2025 14:40

கொள்ளை அடிக்கிறதுன்னு முடிவாயிடுச்சு.


mariyappangopinathan
நவ 12, 2025 14:38

கொள்ளை அடிச்சிட்டு போக இது தான் கடைசி கட்டம். உங்க இஷ்டத்துக்கு கொள்ளை அடிச்சி ஸ்விஸ் வங்கியில் டெபாசிட் பண்ணிடுங்க.


Anbuselvan
நவ 12, 2025 14:02

ஒரு யூனிட்டுக்கு இவ்வுளவு ருபாய் என்பதுதான் இந்த காலத்து டீல்


Rathna
நவ 12, 2025 12:38

சேட்டனுடைய நாட்டில் இப்படி தான் ஒரு அரசாங்க பஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்த இன்னொரு அரசு நிதி நிறுவனம் திவால் ஆகி உள்ளது. டெபாசிட் செய்த பொது மக்கள் எல்லாம் தெருவில்.


ஆரூர் ரங்
நவ 12, 2025 10:59

தனுஷ்கோடியில் சோதனை அடிப்படையில் கடலுக்குள் காற்றாலைகள் அமைக்கும் மத்திய திட்டத்துக்கு திமுக ஆட்கள் எதிர்ப்பு. மாநிலம் உருப்பட்டு விடக்கூடாது என்பதிலேயே குறி. எல்லா அரசு கட்டிடங்கள் பள்ளிகளில் சூரிய சக்தி தகடுகளை அமைக்கக்கூட முயலவில்லை. ஆக மின்சாரம் வாங்குவதில் சம்பாதிப்பதுதான் குறி?.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 12, 2025 08:43

எப்படியும் அணில் கணக்குல ஆயிரம் கோடியை ஆட்டயப்போட அருமையான வாய்ப்பு


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 12, 2025 08:34

அடுத்து வேறு ஆட்சி அமைந்தால் மின்கட்டணத்தை பலமடங்கு உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவார்கள் .அப்போது இதே சார் கட்சிக்காரர்கள் மின்கட்டணத்தை குறைக்க சொல்லி போராட்டம் செய்வார்கள்


c.mohanraj raj
நவ 12, 2025 08:29

total waste of DVD model


duruvasar
நவ 12, 2025 07:44

× 20 % என்று வைத்துக்கொண்டால் கூட பொரி கடலை செலவுக்கு கூட காணாது


Svs Yaadum oore
நவ 12, 2025 07:05

சாத்தியப்படும் வகையில், மிகக்குறைந்த விலையில் கொள்முதல் செய்யனுமாம் ...மின்பற்றாக்குறையைச் சமாளிக்க சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் ....அனல் மின் நிலைய உற்பத்தி செலவு ஒரு யூனிட் 6 ரூபாய்தான் ..ஆனால் கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒரு அனல் மின் திட்டம் கூட செயல்படுத்தப் படவில்லை... இதற்கு காரணம் யார் ??.....வருமானத்தில் 62% சதம் வெளியிலிருந்து மின்சாரம் வாங்கியதற்காக மட்டுமே செலவிடப் பட்டிருக்கிறது.. இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை