உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் இரும்புக்கரத்தை இப்போதாவது செயல்படுத்த வேண்டும்: இ.பி.எஸ்., கண்டனம்

முதல்வர் இரும்புக்கரத்தை இப்போதாவது செயல்படுத்த வேண்டும்: இ.பி.எஸ்., கண்டனம்

சென்னை:தமிழ்நாடும் நம் மக்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்று உணர்வோடு, முதல்வர் அடிக்கடி சொல்லி காட்டுகின்ற அந்த இரும்புக்கரத்தை இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும் என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.இ.பி.எஸ்., அறிக்கை:திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் இறந்து உள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.என்.ஐ.ஏ., ஏ.டி.எஸ்., உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் உள்ளதால் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன.ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் என்.ஐ.ஏ.,-வால் கைது செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.தமிழ்நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காவல் துறையை தன்னகத்தே வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினோ , தினம் ஒரு வீடியோ சூட்டிங்கில் பிஸியாக உள்ளார்,நாடக வீடியோக்கள் மீதான நாட்டத்தை குறைத்து கொண்டு, தமிழ்நாடும் நம் மக்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்று உணர்வோடு, முதல்வர் அடிக்கடி சொல்லி காட்டுகின்ற அந்த இரும்புக்கரத்தை இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும் .இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

panneer selvam
மார் 02, 2025 00:50

Edappaddy ji , our Stalin ji never knows what is Iron hand approach and never done tough handling of any critical issues . It is not there in DMK culture . Any question , DMK always responds with counter questions . Still they believe that any issue could be diluted or diverted with the help of cronies and family media channels


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை