உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் மீதான நம்பகத்தன்மை முற்றாக அழிந்து விட்டது: தலைமை செயலக ஊழியர் சங்கம் கோபம்

முதல்வர் மீதான நம்பகத்தன்மை முற்றாக அழிந்து விட்டது: தலைமை செயலக ஊழியர் சங்கம் கோபம்

சென்னை: 'ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகள் குழு அறிக்கை அளித்தாலும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியில் அமரப்போகும் அரசால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும்' என, தமிழக தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜனவரி 11ம் தேதி சட்டசபையில் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படாது என்ற தொணியில், ஒரு அறிவிப்பு வெளியிட்டார். இது முதல்வரின் அறிவிப்பு இல்லை என்றாலும், நிதி அமைச்சர் சட்டசபையில் அறிவித்ததால், தமிழக அரசின் கொள்கை முடிவாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். இப்போது, ஓய்வூதிய திட்டங்களை ஆய்வு செய்வதற்காக, அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது, அதை உறுதிப்படுத்தியுள்ளது.

முரண்

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அளித்த பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் என்ற, வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக, அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, அதிகாரிகள் குழு அமைத்தது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. குழு என்றாலே ஒரு விஷயத்தை காலம் கடத்துவதுதான் என்பது அனைவரும் அறிந்தது. அதுவும் அதிகாரிகள் குழுவிற்கு ஒன்பது மாத கால அவகாசம் வழங்கியிருப்பது, எந்த வகையிலும் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கை. அதிகாரிகள் குழு அமைப்பது என்பது, முதல்வரின் மீதான நம்பகத்தன்மையை முற்றாக அழித்து விட்டது. தமிழகத்தில் அமைக்கப் பட்ட எந்தவொரு குழுவும், அறிக்கையை காலவரையறைக்குள் வழங்கியதில்லை. அந்த வகையில், இந்த குழுவும் கண்டிப்பாக கால நீட்டிப்பு கோரி, காலத்தை கடத்தும் என்பதுதான் திண்ணம். ஒன்பது மாதங்களுக்குள் அறிக்கை அளித்தாலும், அதை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் தி.மு.க., அரசுக்கு இல்லை.

கொள்கை முடிவு

வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியில் அமரப்போகும் அரசால் மட்டுமே, இந்த பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து, முடிவு எடுக்க முடியும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை; கொள்கை முடிவு எடுத்தாலே போதும். முதல்வர் அமைத்துள்ள அதிகாரிகள் குழுவை உடனடியாக கலைத்துவிட்டு, இனியும் காலம் தாழ்த்தாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Raj thanaraj
பிப் 07, 2025 15:20

Arasiyal


ramani
பிப் 07, 2025 14:52

நீங்கள் எல்லாம் திமுகவிற்கு வால் பிடிக்கறவங்கதானே. குறை கூறலாமா. உங்களுக்கு அந்த அருகதையிருக்கா. சம்பளம் அதோட கிம்பளம் இன்னும் அதிகமாக வேண்டுமா? உங்களுக்கு ஒட்டுமா.


Selva Kumar
பிப் 07, 2025 07:00

இவர்கள் சம்பளம் தவிர சம்பாதிப்பது அதிகம் . இதில் பிற அல்லோவான்சஸ் வேற. இவற்றை கட் செய்து பென்சன் வழங்கலாம்


Rajagopalan R
பிப் 06, 2025 17:55

கேழ்வரகில் நெய் வடியிது என்றால் கேட்பாருக்கு மதி எங்கே ?


Ms Mahadevan Mahadevan
பிப் 06, 2025 15:31

அவன் அவன் தினசரி 800/- 600/_ சம்பளம் வங்கிறவன் பலசரக்கு கடைகளில் ஜவுளி கடைகளில் பிற சிறு நிறுவனங்களில் வேலை பார்த்து கஷ்ட ஜீவம் பண்ணி கொண்டும் இ பி ஃப் பென்சன் 2000/_ வாங்கி கொண்டு வரும் போது இவர்களுக்கு என்ன


தேவராஜன்
பிப் 06, 2025 11:03

விடுங்க பாஸ். ரவுடிக் கும்பலிடம் நிர்வாகத் திறமையை எதிர் பார்க்குறீங்க. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல?


Subburamu Krishnasamy
பிப் 06, 2025 10:37

Government servants always blindly supporting the ruling parties. They are very loyal to dravidian parties, indirectly helping the dravidian parties. Now they have no moral rights to blame the DMK ADMK party governments


R.Durairaj
பிப் 06, 2025 10:15

எல்லாம்சரித்தான் அரசு ஊழியரைவிட சிரம்படுபவர் ஏராளம் அரசு ஊழியரைவிட சொற்ப வருமானத்திற்கு கடின வேலை செய்பவர் ஏராளம் இன்று அரசு ஊழியர்க்கு என்ன குறை ,இதற்கு முந்தைய அரசு எவ்வளவு கேவலப்படுத்தியது என உணரவேண்டும் அடுத்த அரசு மட்டும் பாலாறு ஓட விடுமா என்ன? இதைவிட கேவலமாகத்தான் செயல்படும் எந்த கட்சி ஆட்சியென்றாலும் இப்படித்தான்உங்கள் செயல் கட்சி்சார் ஊடகங்களுக்கு வேண்டுமானால் தீனி்போடலாம் மற்றபடி பயன் ஒன்றுமில்லை


NATARAJAN R
பிப் 06, 2025 10:05

"நீட் தேர்வு ரத்து ஒரே கையெழுத்து முதல் கையெழுத்து ரகசியம் தலைவருக்கு மட்டும் தான் தெரியும்"திரு உதயநிதி. ஆட்சிக்கு வந்து 4 வருடம் முடிந்த பின் நீட் தேர்வு ரத்து மத்திய அரசு செய்ய வேண்டும்.மாநில அரசு செய்ய முடியாது. "திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்தப்படும்" திரு ஸ்டாலின் முதல்வர். இப்போது 4 வருடம் முடிந்த பிறகு ஒரு குழு அமைத்து அறிக்கை பெறப்படும்.9 மாத அவகாசம். பிறகு தேர்தல் வந்து விட்டது என சொல்லி விடலாம். தமிழகத்தில் இந்தியாவிலேயே இளம் விதவைகள் அதிகம்.காரணம். மது.அது பற்றி எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எள்ளளவும் கவலை இல்லை திருமதி கனிமொழ இப்போது நிருபர் கேள்வி எழுப்பினால் ஒரே ஓட்டம். இதுதான் திமுக


K.aravindhan aravindhan
பிப் 06, 2025 08:31

இலவுகாத்த கிளிகள்