உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தியை தடை செய்யும் மசோதா வெறும் வதந்தி அல்ல; சொல்கிறார் அண்ணாமலை

ஹிந்தியை தடை செய்யும் மசோதா வெறும் வதந்தி அல்ல; சொல்கிறார் அண்ணாமலை

சென்னை: 'தமிழகத்தில் ஹிந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்ய திமுக அரசு திட்டமிட்டது வெறும் வதந்தி அல்ல. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல்,' என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் ஹிந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால், இந்தத் தகவலுக்கு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என்று சட்டசபை செயலர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=054yz55n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், தமிழகத்தில் ஹிந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்ய திமுக அரசு திட்டமிட்டதுவெறும் வதந்தி அல்ல என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; தமிழகத்தில் ஹிந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்ய திமுக அரசு திட்டமிட்டது வெறும் வதந்தி அல்ல. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல். திமுக தொண்டர்கள் வழக்கம் போல, ஹிந்தி எழுத்துக்களை எரிப்பதும், ஹிந்தி மொழியை கருப்பு மை வைத்து அழிப்பதும் போன்ற வழக்கமான நாடகங்களை தொடங்கி விட்டனர். சட்டசபையில் ஹிந்தியை தடை செய்யும் மசோதாவை தடை செய்யும் தகவலை அறிந்து நேற்று பொள்ளாச்சியில் திமுகவினர் ஹிந்தி எழுத்துக்களை எரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இயல்பாகவே பிளவுபட்டுள்ள இண்டி கூட்டணி, ஊழலில் மட்டும் ஒன்றுபட்டுள்ளது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kailasam
அக் 16, 2025 23:24

உண்மையாக இருந்தால் என்ன தவறு ...மொதல்ல டெல்லி இல் தமிழ் அறிவிப்பு பலகை வையுங்க ...


Suppan
அக் 16, 2025 21:19

இண்டி கூட்டணிக்கு பிஹாரில் மிகப்பெரிய தோல்வி காத்திருக்கிறது . விடியல் திதி கொடுத்துவிடும் போல


Madhavan
அக் 16, 2025 21:13

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு ஒரு இந்திய மொழியை சட்டசபையில் ஒரு தீர்மனம் நிறைவேற்றி தடை செய்ய முயல்கிறது என்பது உண்மையாக இருப்பின் இது கண்டிக்கத்தக்கது. இது ஒரு ஜனநாயக விரோத செயலாகக் கருதப்படும். தமிழுக்கு உள்ள உரிமை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் உண்டு. வோட்டு வங்கி அரசியலுக்காக மொழிப் பிரிவினையைத் தூண்டி அரசியல் செய்வது ஆட்சி கவிழ்ப்பில்தான் முடியும்.


sengalipuram
அக் 16, 2025 17:48

Right time to use Article 356


Bellie Nanja Gowder
அக் 16, 2025 17:42

தமிழகத்தில் இந்தியை ஒழிப்பதாக கூறி கொண்டு இருக்கும் தி மு க அவர்கள் நடத்தும் சி பி ஸ் ஈ , ஐ சி எஸ் ஈ , metruculashan பள்ளிகளிலும் ஹிந்தியை ஒழிப்பார்களா ????


சமீபத்திய செய்தி