உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலை பணியில் புதிய வரலாறு திட்டங்களை பட்டியலிட்டு அரசு பெருமிதம்

சாலை பணியில் புதிய வரலாறு திட்டங்களை பட்டியலிட்டு அரசு பெருமிதம்

சென்னை: 'சாலை திட்டங்கள், மேம்பால பணிகள் போன்றவற்றால், மற்ற துறைகளை போல நெடுஞ்சாலை துறையிலும், இந்திய அளவில் தமிழகம் சிறந்த மாநிலமாக புதிய வரலாறு படைத்து வருகிறது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசின் அறிக்கை:தமிழகத்தில், 2021ல் துவக்கப்பட்ட, முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3,858 கோடி ரூபாய் மதிப்பில், 448 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலைகள்; 2,207 கோடியில், 1,681 கி.மீ.,க்கு இருவழி சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.தற்போது, 2,807 கோடி ரூபாய் மதிப்பில், 383 கி.மீ.,க்கு நான்கு வழித்தட சாலை; 709 கோடி ரூபாயில் 357 கி.மீ.,க்கு இருவழித்தட சாலை பணிகள் நடந்து வருகின்றன. ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 17,154 கோடி ரூபாயில், 9,620 கி.மீ., சாலைகள்; 1,161 கோடி ரூபாயில், 996 பாலப்பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.மண்ணச்சநல்லுார், இலுப்பூர், பார்த்திபனுார், ராசிபுரம், திருத்துறைப்பூண்டி, பவானி, முதுகளத்துார், திருத்தணி, குன்னுார், நாமக்கல் பகுதிகளில், புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.மேலும், 4,907 கோடி ரூபாயில், 5,064 கி.மீ., ஊராட்சி ஒன்றிய சாலைகள்; 4,061 கோடி ரூபாயில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.மாநிலம் முழுதும், 1,370 கோடி ரூபாயில், 1,049 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக கட்டப்பட்டுள்ளன. இதுதவிர 1,134 கோடி ரூபாயில், 29 ரயில்வே மேம்பாலங்கள், 1,161 கோடி ரூபாயில், 996 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.மேலும் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளால் மற்ற துறைகளை போல, நெடுஞ்சாலை துறையிலும், இந்திய அளவில் தமிழகம் சிறந்த மாநிலம் என்ற புதிய வரலாறு படைத்து வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !