உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரோந்து செல்லும் போலீசாரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: அண்ணாமலை

ரோந்து செல்லும் போலீசாரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொள்ளாச்சி: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: உடுமலை அருகே சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல் கொலை செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இது போன்று இனி ஒரு உயிர் போகக்கூடாது. உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற அளவில் போலீசார் ரோந்து செல்கின்றனர். கஞ்சா, குடி போதையில் வருவோர் என்ன செய்கிறோம் என தெரியாத அளவுக்கு குற்றங்களில் ஈடுபடுகின்றனர். மூன்றாண்டுகளில் காவலர், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., என அனைத்து பணியிடங்களையும் நிரப்பி, 'ஜீரோ வேக்கன்சி' நிலையை ஏற்படுத்த வேண்டும். இரவு ரோந்து போலீசார் தனியாக செல்லாமல், இரண்டு பேருடன் செல்ல வேண்டும். நவீன உபகரணங்கள், நல்ல நிலையில் வேகமாக செல்லக்கூடிய ரோந்து வாகனங்கள், உடையில் கேமரா உள்ளிட்டவை வழங்க வேண்டும். புதிய காவல் நிலையங்களை உருவாக்கி, போலீசாரின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். சட்டம் -- ஒழுங்கு சரியில்லை என விமர்சிப்பவர்கள், போலீசாருக்கு தேவையான வசதிகளை செய்து தர அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். குற்றங்களுக்கு காரணமான மது, போதை பழக்கங்களை இரும்புக் கரம் கொண்டு அரசு தடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Padmasridharan
ஆக 08, 2025 11:36

உடையில் கேமரா வெச்சா மொதல்ல மாட்டறது பணம் வசூல் பண்ற காவலர்கள்தான். இவங்க கண்டவங்கள எல்லாம் ஃபோட்டோ /வீடியோ எடுத்துதான் பயமுறுத்தி அதிகார பிச்சை எடுக்கறாங்க.


Padmasridharan
ஆக 08, 2025 11:33

இந்த இடத்துக்கு 3 பேரு போயிருந்தாங்க சாமி. கூட இருந்த காவலரு ஒருவர் இவரை காப்பாத்தாம ஓடிப்போயிட்டாரு..பலரும் தைரியமா தெரியற கோழைங்கதான். காக்கி உடைக்கு கேவலம்தான் ரோந்து பணியில 2-3 பேராதான் வந்து பணம்/பொருள் புடுங்கறாங்க மது_மாதுவுடன் இருக்கிறவங்க கிட்ட. வேற யாராவது இருந்தா அவங்கள அசிங்கமா பேசி பயமுறுத்தி அந்த இடத்தை காலியாவே வெக்கறாங்க, புதுசு புதுசா வர்றவங்க கிட்ட அதிகார பிச்சை எடுக்கறதுக்கு.


Premanathan S
ஆக 08, 2025 10:11

இந்த வெட்டி வீரர் அறிக்கையோடு சரி மக்களே தங்களை அரசுவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலையில் நாடு இருக்கிறது இதில் இவர் வேறு போலீசை பற்றி கவலைப்படுகிறார் என்ன இருந்தாலும் பழைய போலீஸ்காரர்தானே பாசம் துடிக்கிறது


Barakat Ali
ஆக 08, 2025 09:44

அண்ணாமலை புலம்பி என்ன ஆவப்போகுது? ஆடு சார், பக்கோடாஸ் ன்னு பொலம்பிக்கிட்டு அறிவாலய அடைப்பு எடுக்குற கொத்தடிமை ஒண்ணு வந்து கதறும்... தீம்காவும் மக்கள் தேர்ந்தெடுத்துதான் நாங்க ஆட்சிக்கு வந்துருக்கோம்.. திரும்பவும் வருவோம் ன்னு சூடா பதிலடி கொடுக்கும்.. தேவையா இதெல்லாம் இவருக்கு ????


ஆக 08, 2025 06:53

நடை பயிற்சி செய்யும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை .. அவர்களை பாதுகாக்க ரோந்து வரும் போலீசுக்கும் பாதுகாப்பில்லை .. இருப்புக்கரம் கொண்டு எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடக்கிறது .


pmsamy
ஆக 08, 2025 06:49

அண்ணாமலைய பாத்தா பாஜக பட்டியலினத்தை சேர்ந்தவங்களோ அப்படின்னு தோணுது


தியாகு
ஆக 08, 2025 05:36

அண்ணாமலையை திட்டமிட்டு ஓரம் கட்டிய கும்பல் தமிழக பாஜகவில் இருக்கும்வரையில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு சீட்டு கூட தேறாது. அந்த கட்சிக்கு எதிர்காலமும் இருக்காது. துக்ளக் குருமூர்த்தி மாரிதாஸ் போன்றவர்களும் அந்த கும்பலில் அடக்கம்.


Kasimani Baskaran
ஆக 08, 2025 03:51

உடலில் காமிரா என்பது கட்டாயம் - அதுவும் எல்லா நேரங்களிலும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருப்பது அவசியம். சாதாரணமாகவே இருவர் செல்வது நல்லது. சம்மாதானம் செய்து வைக்கப்போவதற்கு ஒரு குழுவே செல்வது பாதுகாப்பானது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை