உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் கட்சியில் அடுத்த விக்கெட்: சேலம் மேற்கு மா.செ., விலகல்

சீமான் கட்சியில் அடுத்த விக்கெட்: சேலம் மேற்கு மா.செ., விலகல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலராக இருந்தவர் ஜெகதீஷ், 38; முனைவர் பட்டம் பெற்ற இவர், அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சி பதவியில் இருந்து விலகுவதாக, சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டுஉள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது:இதுவரை என்னோடு களமாடிய உண்மை நிர்வாகிகளுக்கு நன்றி. நான் மிகவும் நேசித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது கடினமானதாக இருந்தாலும், கட்சியின் சமீபகால செயல்பாடு, குறிப்பாக உட்கட்டமைப்பில் கவனம் செலுத்தாதது வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் விலகல் முடிவுக்கு வந்தேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் நம்மிடம் கூறுகையில், ''என்னைப் போன்று, 120க்கும் மேற்பட்ட மாவட்டச்செயலர்கள் கட்சியில் உள்ளனர். தேர்தலில் தனித்துத்தான் போட்டியிட வேண்டும் என அவர் முடிவெடுத்து அறிவிப்பதற்கு முன், எங்களைப் போன்றோரை அழைத்துப் பேசி கருத்துக் கேட்டிருக்கலாம். அதை செய்யவில்லை. தன்னிச்சையாகவே அறிவித்தார். ''இதனால், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே கிடைத்தது. அதற்காக, நாங்கள் பட்ட பாடெல்லாம் வீணானது. தொடர்ந்தும், சீமானை நம்பி கட்சிக்காக உழைப்பு, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதனால் வெளியேறுவது என முடிவெடுத்தேன்,'' என்றார்.ஏற்கனவே சேலம் மாநகர், மாவட்ட செயலர் தங்கம், கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மாநகர் மாவட்ட செயலர் வைரம், மேட்டூர் நகர துணைத்தலைவர் ஜீவானந்தம் ராஜா உள்ளிட்டோர், கடந்த சில நாட்களாக தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இவர்களைப் போல, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகள், சீமான் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகும் சூழலில், தற்போது சேலம் மேற்கு மாவட்டச் செயலரும் விலகியது கட்சியினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

KavikumarRam
நவ 25, 2024 12:00

ஈழத்தமிழர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் பாவம் இப்போது சைமன் செபஸ்டியனுக்கு ஆப்பாக விழுந்து கொண்டு இருக்கிறது.


KavikumarRam
நவ 25, 2024 11:53

இந்த மாதிரி தீயசக்திகள், வெறுப்பு அரசியல், பொய்புரட்டு, இனமொழி வெறுப்பை தூண்டிவிட்டு அரசியல் செய்வது, வாய்ச்சவடால், இப்படி ஏற்கெனவே திமுக எனும் கட்சி நாப்பது வருசமா தமிழகத்தை நாசமாக்கிட்டானுங்க. அதனால அதே மாதிரி இன்னொரு துணை தீயசக்தி எதுக்குன்னு நினைச்சு தான் திமுகவே நாதக-ல இருந்து நல்ல டிரைனிங் எடுத்த தீயசக்திகளா பார்த்து தூக்கி தன்னோட புதுக்குள்ள சேத்துக்கிட்டு இருக்காங்க.


KavikumarRam
நவ 25, 2024 11:49

இந்த மாதிரி தீயசக்திகள், வெறுப்பு அரசியல், பொய்புரட்டு, இனமொழி வெறுப்பை தூண்டிவிட்டு அரசியல் செய்வது, வாய்ச்சவடால், அப்பாவி ஈழத்தமிழர்களை ஏமாற்றி அந்த பணத்தில் ஈனச்சோறு சாப்பிட்டு அதில் தனது குடும்பத்தை மட்டும் வளமாக்கிக்கிட்டது அவர்கள் ஏன் இன்னும் இந்த மாதிரி குள்ளநரிகளிடம் ஏமாந்து பணத்தை கொடுக்கிறார்கள்னு இன்னும் புரியல, இப்படி தீயவிஷயங்களின் மொத்த உருவமானவரு தான் இந்த சைமன் செபஸ்டியன் கட்சி. கொள்ளயடிச்சதுல ஒழுங்கா பங்கு குடுத்திருக்கமாட்டாரு இந்த நல்லபாம்பு. அதனால தான் குட்டி பாம்புங்க எல்லாம் தானா இரை தேடி கிளம்பிருச்சுங்க.


விவசாயி
நவ 25, 2024 10:38

இந்த நிலம் (தமிழ்நாடு )ஒரு நாள் என் கையில் வரும் - சீமான், அண்ணே முதலில் உன் கட்சியில் இருப்பவர்களை உங்கள் கைகளில் பிடித்துக்கொள்ளுங்கள் பூரா பயலுகளும் தெறிச்சு ஓடுறாங்கே. நான் மட்டுமே என்ற அகங்காரம் சீமானிடம் இருப்பதால் வெகு சீக்கிரம் கட்சியும் கரையும்.


Haja Kuthubdeen
நவ 25, 2024 10:15

சீமானின் எதேச்சதிகாரம்தான் பலரும் விலக காரணமே...பேச்சு மட்டும் போதாது.தனித்தேதான் நிற்பேன் என்றால் அது ஓட்டுக்களை சிதறடிக்கும் நாச புத்தி..


வைகுண்டேஸ்வரன்
நவ 25, 2024 09:39

ஐயோ... நண்பர்களே.. அதாவது.. சீமான் பாஷையில் சங்கிகளே.. அவர் விலகவில்லை. அவரை ஸ்லீப்பர் செல் லாக இவர் தான் அனுப்பி வைக்கிறார். வேணும் னா ரஜினி அல்லது ர. துரைசாமி கிட்ட கேளுங்க. இது அவங்க குடுத்த ஐடியா தான் .


Nallavan
நவ 25, 2024 08:06

ஒருவனால் கட்சி வாழ்ந்தாக இருக்கவேண்டும், ஒருவராக கட்சி வீழ்ந்ததாக இருக்க கூடாது, இவர் இருக்க கூடாது என்பதற்கு உதாரணம்


vadivelu
நவ 25, 2024 07:19

முனைவர் பட்டம் பெற்றவர் எப்படி குறுகிய கொள்கைகளினுடைய கட்சியில் இருந்தார்.


Raj
நவ 25, 2024 05:58

சீமான் கட்சி காலி கிரௌண்ட் தான் இனி. 2026 இல் கட்சி அமைப்பு காலி. அவர் சொன்ன மாதிரி கட்சியில் உள்ள எல்லாவரும் ஸ்லிப்பர் செல்லாக மாறிவிடுவார்கள்.?


Priyan Vadanad
நவ 25, 2024 04:51

சீமானின் "சாட்டை" சீக்கிரமாக "விளக்குமாறாக" மாறி சீமானையும் அர்ச்சனை செய்யும் காலம் கூடி வரத்தான் போகிறது.


சமீபத்திய செய்தி