உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு; சீமான் ஆவேசம்

தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு; சீமான் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; நெல்லையில் 8ம் வகுப்பு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான், தீய திராவிட மாடல் தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு எனக் கூறியுள்ளார்.அவரது அறிக்கை; நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் சக மாணவரால் அரிவாளால் வெட்டப்பட்டு கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதோடு, தடுக்க வந்த ஆசிரியரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள், கத்தி போன்ற கொடூர ஆயுதங்களுடன் பள்ளிக்கு வரும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சியில் சட்டமும், சமூகமும் சீர்கெட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான புகார்களும், பள்ளி மாணவ, மாணவியர் மது அருந்தும் காணொளிகளும், மாணவர்களுக்கு இடையே சாதிய மோதல் செய்திகளும் வராத நாட்களே இல்லை என்ற அளவிற்கு மிக மோசமான நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. அறிவைச் செறிவாக்கி, நற்பண்புகளையும், நல்லொழுக்கத்தையும் கற்பித்து நல்லதொரு தலைமுறையை வளர்த்தெடுத்து நாட்டிற்கு அளிக்கும் பெரும்பணி புரியும் பள்ளிக்கூடங்கள், தி.மு.க., ஆட்சியில் மது போதை விற்பனையகங்களாகவும் சாதிய மோதல்களும், கொலைவெறித் தாக்குதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறும் கூடாரமாகவும் மாறி நிற்பதுதான் ஏற்கவே முடியாத காலக்கொடுமையாகும்.சட்டம்-ஒழுங்கைக் கட்டி காக்க திறனற்ற தி.மு.க., ஆட்சியில் ஒட்டுமொத்த சமூகமும் குற்றச்சமூகமாகச் சீர்கெட்டு நிற்பதன் சமகாலச் சான்றுகளில் ஒன்றுதான் தற்போது பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் மற்றும் ஆசிரியர் மீது நடைபெற்றுள்ள கொலைவெறித் தாக்குதலாகும்.தீய திராவிட மாடல் ஆட்சியை அகற்றுவது ஒன்றே நாட்டில் நாள்தோறும் நடைபெறும் கொடுமைகள் அனைத்தையும் தடுப்பதற்கான சரியான தீர்வாகும்!, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Haja Kuthubdeen
ஏப் 17, 2025 10:43

ஏம்ப்பா சீமான்...தீய திமுக ஆட்சியை அகற்றுவதே நோக்கம்னு சொல்லிட்டு ஒத்தையாதான் அத செய்வேன்யாரு கூடவும் சேரமாட்டேன் என்பது என்ன டிசைன்!!!!!


Barakat Ali
ஏப் 17, 2025 12:42

இவரது சொல்லும், செயலும் திமுகவின் இயக்கத்தில்... அதுதான் டிசைன் ....


Barakat Ali
ஏப் 17, 2025 07:31

ஒரு கூட்டணியை கூட்டணி பலத்தால்தான் வெல்ல முடியும் .... ஆனா இவருக்கு திமுக கொடுத்த அசைன்மென்ட் என்ன ???? எந்த கூட்டணிக்கும் போகாம திமுகவை எதிர்த்து அதிமுகவின் வாக்குகளில் பிளவை ஏற்படுத்தணும் .... அதாவது திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கணும் ...... அப்பத்தான் எதிரணியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் அல்வாத்துண்டு தேனில் விழுந்த மாதிரி திமுக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் .... அதை சுருதி சுத்தமா செஞ்சிக்கிட்டு இருக்காரு சீமான் .... அவரு எதிரணியின் கூட்டணிக்கு வந்தா பீச்சே மோட் ன்னு சொல்லி ஷார்ப்பான ஆப்பை அவருக்கு துக்ளக்கார் செருகிடுவார் .....


நிக்கோல்தாம்சன்
ஏப் 17, 2025 06:34

அப்போ எதிர்க்கட்சிகள் எல்லாம் கைகோர்க்க வேண்டும் , அதை விடுத்து ஓட்டுகளை பிரித்தால் என்னாகும் , சிறிதளவு வித்தியாசத்தில் பிரியாணி பாய்ஸ் வந்து மீண்டும் ஆட்சியில் அமர்வார்கள் ஓசியில் கடன் வாங்கி தமிழர்களை ஏமாற்றுவார்கள்


Kasimani Baskaran
ஏப் 17, 2025 04:04

அப்படி என்றால் இசைப்பாடியுடன் சேர்த்து ஆட்சியில் பங்கு கேட்டால் திராவிடம் படுத்துவிடும்... ஆனால் தீம்க்கா பெரிய அளவில் பெட்டி கொடுத்து சைமனையும் விசை தம்பியையும் தனியாகவே போட்டியிட வைக்கும்.


மதிவதனன்
ஏப் 17, 2025 00:04

இந்த நிலம் ஒரு நாள் என்னிடம சிக்கிச்சி , திரள் நிதி யோக்கியரே முதலில் வேறு ஏன்டா வழக்கிலும் சிக்காம இருக்க பாரு , ஒரு நீதிபதி , நீ பேசிய பேச்சுக்கு 100 வழக்கு போட்டு இருக்கணும் என்று சொன்னார் இது தான் உன் காரி துப்பும் அளவுக்கு உள்ள கதை


Thetamilan
ஏப் 16, 2025 22:59

இவரிடம் இனியும் யாரும் பேரம்பேசவில்லைபோலும் . அதனால் இங்கு ஒருநாள் அங்கு ஒருநாள் என்று மாறி மாறி தாவிக்கொண்டிருக்கிறார். தமிழகம் வந்த சா மோடியுடன் பேச இடம் கிடைக்கவில்லை.வட இந்தியாவிற்கு போய் கூஜா தூக்கினால்தான் அஞ்சு பத்து கிடைக்கும் என்று மோடி கூறிவிட்டார்


Thetamilan
ஏப் 16, 2025 22:56

மோடியின் பாஜவின் பேட்டை ரவுடி


தாமரை மலர்கிறது
ஏப் 16, 2025 22:56

கொடுங்கோல் ஸ்டாலின் அரசை அகற்ற பிஜேபி தலைமையிலான அணிக்கு எடப்பாடி வந்துவிட்டார். அதே மாதிரி சீமானும் விஜய்யும் வருவது நல்லது. இல்லையெனில், திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்க ஆடும் நாடகமாகவே எடுத்துக்கொள்ளப்படும்.


Ramesh Sargam
ஏப் 16, 2025 21:44

இன்று மீண்டும் அதே மாணவன் மீது தாக்குதல். காவல்துறையினர் தூங்குகிறார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை