உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியிலும் அறிவிக்கணும் பயணி: பைலட் அதிரடியாக செய்த காரியம் என்ன தெரியுமா?

இந்தியிலும் அறிவிக்கணும் பயணி: பைலட் அதிரடியாக செய்த காரியம் என்ன தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : இந்தியிலும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என விமான பயணி ஒருவர் பைலட்டிடம் கூறினார். இதனையடுத்து தடாலடியாக பைலட் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.சென்னையில் இருந்து மும்பைக்கு தனியார் நிறுவனமான இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. வழக்கம் போல் பயணிகளுக்கு தமிழில் அறிவிப்பு வழங்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் இந்தியிலும் அறிவிப்பை வழங்க வேண்டும் என கூறினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pos8qrhj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பயணியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ,பைலட் பிரதீப் கிருஷ்ணன் தடாலடியாக இந்தியிலும் அறிப்பை வழங்கினார். “நமஸ்கார், மேரா நாம் பிரதீப் கிருஷ்ணன் ஹை. மேரா பர்ஸ்ட் ஆபிசர் கா நாம் பாலா ஹை. ஹமாரா லீட் கா நாம் பிரியங்கா ஹை. ஹம் ஆஜ் சென்னை சே மும்பை ஜாயேங்கே, 35,000 மே உதயேங்கே, புரா கி தூரி 1,500 கிமீ ஹை, புரா கா சமய் ஏக் கண்டா ஏக் காண்டே டீஸ் மினிட் ஹை, ஜானே கே டர்புலன்ஸ் ஹோகா, ஹம் சீட் பெல்ட் தாலேங்கே, மெயின் பி தாலேங்கே. தன்யாவத் (வணக்கம், என் பெயர் பிரதீப் கிருஷ்ணன். எனது முதல் அதிகாரி பாலா. எங்கள் தலைவரின் பெயர் பிரியங்கா. நாங்கள் சென்னையில் இருந்து மும்பைக்கு 35,000 அடி உயரத்தில் 1,500 கிலோமீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்களில் கடக்கிறோம்.சீட் பெல்ட் அணிவோம். நானும் அணிவேன் .நன்றி) ” என்றார்.இச்சம்பவம் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து பைலட், பிரதீப் கிருஷ்ணன் இந்தி மொழியில் பயணிகளுடன் இணையும் இலகுவான முயற்சி, அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றதோடு மட்டுமல்லாது, பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைத் தழுவியதன் அழகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்ற வரிசையில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Nellai Ravi
செப் 08, 2024 16:32

அனைவரும் குறைந்த பட்சம் ஆங்கிலத்திலும், பெரும்பாலோர் குறைந்த பட்ச தமிழிலேயே பேசுகிறார்கள்... பிரச்னை ஒன்றும் இல்லை.


Uthayanan.m
செப் 06, 2024 17:54

இந்தியை வளர்க்க இந்தப்பாடு


ameen
செப் 06, 2024 08:44

தமிழில் எழுதினால் இந்திகாரனுக்கு புரியாது,இந்தியில் எழுதவும்....


Arachi
செப் 05, 2024 16:43

இதேபோன்று தமிழ் நாட்டில் இருக்கும் அத்தனை ஏர் போர்டில் முதல் முதல் நுழைவு வாயிலில் நிற்கும் அத்தனை இந்தி பேசும் அலுவலர்கள் தமிழில் பேசவேண்டும். குறைந்த பட்சம் ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும். குறிப்பாக சென்னை ஏர் போர்டில். இதைக் கட்டாயமாக்க படவேண்டும்.


Sainathan Veeraraghavan
செப் 05, 2024 15:50

கட்டாயமாக ஹிந்தியிலும் அறிவிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் அறிவித்தால் மிகவும் நல்லது.


Indian
செப் 05, 2024 11:53

வெட்டி விளம்பரம் ,


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 05, 2024 10:26

ஆங்கிலம் அறியாத அதே சமயம் ஹிந்தி மட்டுமே அறிந்த பயணிக்கு தமிழில் சொன்னால் எப்படிப்புரியும் ???? இணைப்பு மொழியாக ஒரு இந்திய மொழி இருப்பது அதுவும் அதிகம் பேர் பேசும் மொழியாக இருக்க வேண்டும் ..... ஹிந்தியை எண்பது சதவிகிதம் தன்னகத்தே கொண்ட உருதுவை வீட்டில் பேசும் ஹிந்தி வேணாம் போடா என்று அலறுவது ஏன் கோவாலு ????


பச்சையப்பன் கோபால் புரம்.
செப் 05, 2024 09:16

அடங்கொப்புரானே! தமிழ் தெரியாதன் எதுக்கு தமிழ் நாட்டுக்கு வரணும்? அப்புறம் தமிழ் தெரியாது இந்தியிலே அறிவிக்க சொல்லணும்! அந்த பிளேன் மும்பை போகுதுன்னு கூட தெரியாம ஏறிட்டானா இந்திக்கார பீடா வாயன்ஃ??.முதல்லே இந்தியில பேசுன அந்த பைலட்டை வேலைய விட்டே தூக்கி எங்கழ் முத்தமிழ் வித்தவர் சமாதியிலே பிச்சை எடுக்க வைக்கணும்.


Sankaran Natarajan
செப் 05, 2024 12:46

ஆங்கிலம் தெரியாத தத்தி அமெரிக்காவுக்கு எதுக்கு போறாரு?


சண்முகம்
செப் 05, 2024 06:19

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி செல்லும் இந்திகோ விமானத்தில் தமிழில் அறிவுப்பு கிடையாது. விமானி பணிப்பெண்கள் யாருக்கும் தமிழும் தெரியாது. அவசரம் நேர்ந்தால் பயணியர் கதி அதோ கதி


Sankaran Natarajan
செப் 05, 2024 12:49

தமிழில் அறிவிப்பு செய்யுங்கள் என கோரிக்கை வையுங்கள். முடிந்தால் எழுத்துப்பூர்வமாக, இமெயில் மூலம். ஐ தொழில்நுட்பம் மூலம் இது உடனே நிறைவேற்றப்படும்


Senthil
செப் 05, 2024 01:32

அவர் ஹிந்தியை தூக்கிப் பிடிக்கிற குடுமி கூட்டத்தைச் சேர்ந்தவர், அதனால் சந்தோஷமாக ஹிந்தியில் அறிவித்தார் இதே நிலை தமிழுக்கு அரசு ப்ளேன்களில் இருக்கிறதே, அங்கு தமிழில் அறிவிப்பார்களா?


புதிய வீடியோ