உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் நிறுத்தம்

பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் நிறுத்தம்

மதுரை : இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக இன்று (செப்.20) இரவு 8:00 மணி முதல் செப்.23 காலை 6:00 மணி வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது. எனவே விண்ணப்பதாரர்கள், பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வது முதல் அனைத்து பணிகளுக்கும் தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்தபின் பாஸ்போர்ட் சேவைக்கான இணையதளத்தை பயன்படுத்த வேண்டும். விவரங்களுக்கு மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை 0452- 252 1205 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை