உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றங்களை தடுக்க வேண்டும் என போலீசார் உறுதி எடுக்க வேண்டும் : முதல்வர்

குற்றங்களை தடுக்க வேண்டும் என போலீசார் உறுதி எடுக்க வேண்டும் : முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குற்றம் நடப்பதற்கு முன்னரே அதனை தடுக்க வேண்டும் என ஒவ்வொரு போலீசாரும் உறுதி ஏற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவல்துறையில் சிறப்பான பணியாற்றிய போலீசாருக்கு ஜனாதிபதி உள்ளிட்ட பதக்கங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காவல்துறையினர் பதக்கங்கள் வாங்கியது நான் வாங்கியது போன்று மகிழ்ச்சியாக உள்ளது காவல் துறையினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பதக்கம் வழங்க துவங்கி 55 ஆண்டுகள் ஆகிறது. முதல் காவல் ஆணையம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி . அதன் பின்னர் தான் மத்தியஅரசு காவல் துறையை நவீனமயமாக்கும் பணியை துவக்கியது. காவல்துறையில் பெண்களை இடம் பெற செய்தவர் கருணாநிதி. இன்றைய அணிவகுப்பில் பெண் காவலர் கமாண்டராக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி.காவல்துறையினர் பதக்கங்களை வாங்கியதை பார்க்கும் போது நான் வாங்கிய மகிழ்ச்சி ஏற்பட்டது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அனைத்து துறைகளும் எனக்கு நெருக்கமான துறைதான். அதிலும் காவல்துறை என்றால் கூடுதல் நெருக்கம்.மனித உரிமை குறியீட்டில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அமைதியான மாநிலத்தில் தான் வளர்ச்சி இருக்கும். தமிழகம் பெருமைமிகு மாநிலமாக மக்களை பாதுகாக்கும் காவலர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால் காவல் ஆணையம் துவங்கப்பட்டுள்ளது. காவல் ஆணையம் மூலம் காவல்துறையினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை பின்பற்றி உழைத்தால் அங்கீகாரம் கிடைக்கும். கடமையை செய்தால் பாராட்டும் பலனும் உங்களை தேடி வரும்.குற்றங்களின் எண்ணிக்கை பூஜ்யம் என்ற நிலையை அடைவதற்கு அர்ப்பணிப்பு அவசியம். தமிழ்நாடு பெருமைமிகு மாநிலமாக திகழ்வதற்கு காவல் துறையின் அர்ப்பணிப்பு அளப்பரியது. குற்றமிழைக்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என்பதை போலீசார் உறுதி ஏற்க வேண்டும்.

பெண்போலீசாருக்கு சலுகை

மகப்பேறு முடித்துவரும் பெண் காவலர்களுக்கு கணவர், உறவினர்கள் வசிக்கும் ஊரில் மூன்றாண்டுகள் ஒரே பகுதியில் இருக்கும் வகையில் பணி மாற்றம் வழங்கப்படும். குற்றங்களை கண்டறியும் வகையில் பெண்காவலர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sundaresan
ஆக 24, 2024 05:41

முதலில் உங்கள் கட்சி மாவட்டம்,வட்டம்,சதுரம் கட்சிக்காரர்களை அடக்குங்கள்.குற்றங்களும் தானாகவே குறைந்து விடும்.காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவேண்டும்


Mani . V
ஆக 24, 2024 04:46

நான் சொல்லலை, சார் நல்லா காமெடி பண்ணுவாருன்னு.


ganapathy
ஆக 23, 2024 23:57

ஆமாமா நாங்க "அயல் உறவு திமுக உறுப்பினராக" மொள்ளமாறி முடிச்ச அவுள்க்கி கஞ்சா பார்ட்டி கேப்மாறி பிக்பாக்கெட் ஆளுங்களா வச்சுப்போம் ஆனா போலீசு உறுதியா இருக்கோணும் நாங்க சொல்ற குற்றவாளிகளை அரெஸ்ட் பண்ண.


சமூக நல விரும்பி
ஆக 23, 2024 22:48

இன்று காவலர்கள் பல்ல புடிங்கின பாம்பா இருப்பதற்கு யார் காரணம். அது எல்லோருக்கும் தெரியும்


theruvasagan
ஆக 23, 2024 22:28

அதாகப்பட்டது. குற்றங்களை தடுப்பதில் இதுவரை போலீசார் உறுதியாக இல்லை. அதற்கு யார் காரணம்.


ஆரூர் ரங்
ஆக 23, 2024 22:08

வில்சன் ன்னு ஒரு போலீஸ் அலுவலரை மூர்க்க பயங்கரவாதிகள் படுகொலை செய்த போது உங்கள் கட்சி மௌனமாக இருந்ததன் காரணம் எல்லோருக்கும் புரியும்


Anbuselvan
ஆக 23, 2024 21:53

அதை விட பொதுமக்கள் அதாவது ஒவ்வொரு குடிமகனும் உறுதி எடுத்து கொண்டால் குற்றமே நிகழாது அல்லவா. அது சரி போலீஸ் யாருடைய கொன்றோல்ல வருது?


Bala
ஆக 23, 2024 21:27

அண்ணாமலைப் பல்கலைக்கழக உதயகுமாரை அவரின் அப்பாவை தன்னுடைய பிள்ளையில்லை என்று எழுதி வாங்கியவரு எப்படிப் பட்டவருூ என்று சொல்லமுடியுமா?


பாரதி
ஆக 23, 2024 21:02

பயிரை மேலும் வேலிகள் பயிருக்கு அறிவுரை கூறின நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அடடே என்ன தமாஷ்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 23, 2024 21:02

அதுல பாருங்க ...... குற்றங்களைத் தடுக்கிறது ன்னா குற்றங்கள் நடக்குறதுக்கு முன்னாடியே குற்றவாளி குற்றத்தைச் செய்யாமே தடுக்குறதுதான் ...... நம்மளால கள்ளச்சாராயத்தைக் கூட தடுக்க முடியல .... கொஞ்சம் நல்ல சாராயத்துலதான் நம்ம பொருளாதாரமே அடங்கியிருக்கு ...... நாமெல்லாம் இப்படி காமெடி பண்ணுனா அதுவும் முன்னணி மாநிலம் ன்னு நாமளே சொல்லிக்கிட்டு ..... என்னவோ போங்க .... வடக்கன்ஸ் காறி உமிழுறானுங்க .....


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ