சென்னை : 'பதிவுத்துறை வருவாய் வளர்ச்சியில், புதிய வரலாற்று சாதனை படைத்து உள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு பிப்ரவரி வரை, 1,171.60 கோடி ரூபாய் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது' என, வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதிநிர்மலா சாமி தெரிவித்து உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நடப்பு நிதியாண்டில், கடந்த பிப்ரவரி மாதம் மட்டும், பதிவுத்துறை 1,812.69 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. கடந்த நிதியாண்டில், 2023 பிப்ரவரியில் 1,593.95 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. அதை விட, இந்த ஆண்டு 218.74 கோடி ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. தடுக்கப்பட்டது
நடப்பு நிதியாண்டில் கடந்த மாதம் வரை, 16,653.32 கோடி ரூபாய், பதிவுத்துறையால் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு பிப்ரவரி வரை அடைந்த வருவாயான, 15,481.72 கோடி ரூபாயை விட, 7.57 சதவீதம், அதாவது 1,171.60 கோடி ரூபாய் கூடுதலாகும்.'ஜியோ கோஆர்டினேட்ஸ்' உடன் கூடிய புகைப்படத்தை, கிரைய ஆவணத்துடன் இணைத்து, ஆவணப்பதிவு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால், கட்டட மதிப்பிற்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில், கட்டடங்களை மறைத்து, ஆவணம் பதிவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது.இதனால், கட்டடங்களின் மதிப்புக்கு உரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் அரசுக்கு செலுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலீடுகளின் வளர்ச்சி, தனி நபர் வருவாய் பெருக்கம் போன்றவை காரணமாக, பதிவுத்துறையில் இதை விட கூடுதல் வருவாய், இந்த நிதியாண்டில் எதிர்பார்க்கப்பட்டது. தயக்கம்
ஆனால், கடந்த டிசம்பரில், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரண மாக, மனைகளின் விற்பனை பாதிக்கப்பட்டது.வெள்ள நீர் ஒரு சில நாட்களில் வடிந்தபோதிலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில், மனைகளை வாங்க மக்கள் தயங்குவதால், மனைகளின் ஆவணப்பதிவு குறைந்துள்ளது. இதனால், கூடுதலாக எதிர்பார்க்கப்பட்ட வருவாய் வராமல் போனது.இந்நிலையிலும், பதிவுத்துறை கடந்த ஆண்டில் பிப்வரி மாதம் வரை ஈட்டிய, 15,481.72 கோடி ரூபாயை விட கூடுதலாக, 1,171.60 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. இதுவரை எய்தப்பட்ட அதிக வசூல் சாதனையாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ணி
அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் பணித் திறன் குறித்த ஆய்வுக் கூட்டம், நே்றறு சென்னையில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார்.கூட்டத்தில், பதிவுத் துறையில் பணியின் போது இறந்த, பணியாளர்களின் வாரிசுகள் ஏழு பேருக்கு, கருணை அடிப்படையில், அரசு பணி நியமன ஆணைகளை, அமைச்சர் வழங்கினார்.