உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேனி, திண்டுக்கல்லில் கள்ளநோட்டு புழக்கம்: கேரள கும்பல் கைவரிசை

தேனி, திண்டுக்கல்லில் கள்ளநோட்டு புழக்கம்: கேரள கும்பல் கைவரிசை

தேனி : தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் வங்கிகளில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது. இதில் தொடர்புடைய கேரள கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகைக்காக, கேரளா இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பொருட்கள் வாங்க, தேனி மாவட்டம் வருகின்றனர். இவர்கள் தரும் பணத்தில் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் கலந்துள்ளன.

வியாபாரிகள் சிலர் கூறுகையில்,'ஓணம் சீசனுக்காக, கேரளாவிற்கான காய்கறி தேவை அதிகரித்துள்ளது. மொத்த வியாபாரிகள் தரும் பணத்தை நம்பிக்கை அடிப்படையில் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் தருகிறோம். அவற்றில் கள்ள நோட்டுக்கள் கலந்து வருகின்றன', என்றனர்.

கள்ளநோட்டு குறித்து யாரும் புகார் தருவதில்லை என்பது போலீசார் கருத்து.

திண்டுக்கல்: நாகல் நகர், கனரா வங்கி மேலாளர் சேதுலிங்கம், மாவட்ட குற்றப்பிரிவில் அளித்துள்ள புகாரில், 'வங்கியில், ஒன்பது 1000 ரூபாய்; ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டுகள் வந்துள்ளன. இது எப்படி வந்தது? என, அறிய முடியவில்லை. இதை கண்டுபிடிக்க வேண்டும்,' என, கூறியுள்ளார். கள்ள நோட்டை புழக்கத்தில் விடுவது கேரளாவை சேர்ந்த கும்பல் என, தெரிகிறது. இவர்கள் லாட்ஜில் தங்கி இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. பழநி, கொடைக்கானல் பகுதிகளில் கள்ளநோட்டு புழக்கத்தில் உள்ளதா? என்பதை கண்டறிய, இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை