உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மிதமான மழையும், பனி மூட்டமும் உண்டு

மிதமான மழையும், பனி மூட்டமும் உண்டு

சென்னை:'பல மாவட்டங்களில் மிதமான மழை உண்டு; பனி மூட்டமும் காணப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு:தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலவுகிறது. வங்கக்கடலின் தென் மேற்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், குமரிக்கடல், லட்சத்தீவு, அரபிக்கடலின் தென் கிழக்கு, மத்திய பகுதிகளில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, வரும் 6ம் தேதி இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இன்றும் நாளையும், சில மாவட்டங்களில் கன மழையும், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். வானம் மேகமூட்டமாக காணப்படும். காலை நேரங்களில் மேக மூட்டத்துடன் பனி மூட்டமும் சேர்ந்து காணப்படும்.நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, கன்னியா குமரி மாவட்டத்தில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது. ராமநதி அணை, மாஞ்சோலை, பேச்சிப்பாறையில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ