உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த எந்த தடையும் இல்லை என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து கமிட்டி அமைத்து நடத்தக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ,மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை. போட்டியின் போது தனிநபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ எந்த பிரச்னையும், இடையூறும் செய்யக்கூடாது. இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கலாம், என உத்தரவு பிறப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை