உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிறிஸ்தவ, திராவிட கொள்கைகளுக்கு வித்தியாசம் கிடையாது: சொல்கிறார் உதயநிதி

கிறிஸ்தவ, திராவிட கொள்கைகளுக்கு வித்தியாசம் கிடையாது: சொல்கிறார் உதயநிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: '' கிறிஸ்தவ கொள்கைக்கும், திராவிட கொள்கைக்கும் வித்தியாசம் கிடையாது,'' என துணை முதல்வர் உதயநிதி கூறினார்.மதுரையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் என் மீது காட்டும் தனி பிரியம் தனிப் பாசம் என்னை மிகவும் நெகிழச் செய்கிறது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வராக, திமுக இளைஞரணி செயலராக பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது.கிறிஸ்தவ கொள்கைக்கும், திராவிட கொள்கைக்கும் வித்தியாசம் கிடையாது. இரண்டுமே எல்லா நேரத்திலும் மனிதநேயம், அன்பு, சகோதரத்துவத்தை போதிக்கின்றன. உயர்ந்த கொள்கையான இரக்கத்தை போதிப்பது கிறிஸ்தவம். அதையே திராவிடமும் கூறுகிறது. சாதாரணமானவர்கள் உழைத்தால் உயரலாம் என்பதை நிரூபித்து காட்டியது திராவிட இயக்கம். இதற்கு உதாரணம் ஈவெ ராமசாமி, அண்ணாதுரை ,கருணாநிதி.மத்திய ஆட்சியாளர்களுக்கு தமிழகம், தமிழக மக்கள் மீது பயம் உள்ளது. எல்லா மக்களும் ஒன்று சேர்ந்துவிடுவார்களோ, நமது அதிகாரம் பறிபோய் விடுமோ என்ற பயம் உள்ளது. இதனால், ஜாதி, மதம் பெயரால் வெறுப்புணர்வை வேண்டும் என்றே பரப்புகின்றனர். எவ்வளவு முயற்சி செய்தாலும் தமிழகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றி பெறாது. இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

shakti
டிச 19, 2025 14:06

உண்மைதான் ..


பாரதி
டிச 19, 2025 12:45

தமிழர்களின் மதம் கிறிஸ்தவ மதம் தான் என்று மெல்ல மெல்ல ஆக்குவதற்கு இது சரியான வழி தமிழர்களே தொடர்ந்து முட்டாளாக இருங்கள் இந்த திருடன் தொடர்ந்து உங்களை நன்கு ஏமாற்ற ஆதரவு கொடுங்கள் எல்லோரும் நாசமாக போங்கள்


Anand
டிச 19, 2025 12:25

ஒழுக்கம் என்கிற பேச்சுக்கு இடமில்லை, யார் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், திரியலாம்.


ஆரூர் ரங்
டிச 19, 2025 10:59

இரண்டுமே இறக்க சுபாவம் மிக்கவை. இரண்டு உலகப் போர்களும் பெரும்பாலும் கிறித்துவ நாடுகளால் நடத்தப்பட்டு பல கோடி மக்கள் இறப்புக்கு காரணமாகின.


Saai Sundharamurthy AVK
டிச 19, 2025 10:54

அதெப்படி ???? திராவிட கொள்கை என்பது ராமசாமி நாயக்கர் கொள்கை தானே !! அதாவது கடவுள், இறைவன் என்பதெல்லாம் கிடையாது என்பது தானே....! இந்த கொள்கை கிருஸ்துவதுக்கும் பொருந்தும் என்று கூற வருகிறாரா? அப்படியானால் ஏசு என்பவர் மூட நம்பிக்கையின் அடையாளம் என்று தானே அர்த்தம்..! அதாவது திராவிட கொள்கைப் படி அவர் வெறும் ஒரு மானுடன் என்கிற கதாபாத்திரம் தான்... உண்மை வெளி வந்து விட்டது.


Sun
டிச 19, 2025 10:40

இந்துக்கள் எப்பவும் ஒன்ன சேர மாட்டார்கள்! அவர்களை ஆரிய, திராவிட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட என வழக்கமான நம்ம பிரித்தாளும் சூழ்ச்சியால் அவர்கள் வாக்குகளை எப்படியும் நாம வாங்கி விடலாம். இந்துக்கள் ரொம்பவும் யோசிக்கவும் மாட்டார்கள்! இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் வாக்குகள் வேறு எங்கும் போய் விடக் கூடாது ! என்ற அதன் வெளிப்பாடுகள்தான் திருப்பரங்குன்றம் சர்வே கல், சமண தீபம், கிறிஸ்தவமும் திராவிடமும் ஒன்று தான் போன்ற உருட்டுகள் எல்லாமே !


SIVA
டிச 19, 2025 10:02

கிறிஸ்தவ அமைப்புகள் முறையாக கணக்கு வழக்குகளை அரசுக்கு கொடுப்பதில்லை, தீயமூகவும் அது போன்று தான் அதனால் அவர் சொல்வது சரி தான் ...


ManiK
டிச 19, 2025 09:00

பழக்கதோஷத்துல கடைசியாக கிருஸ்துவத்திலும் ஸ்டிக்கர் ஒட்டிவிட்டார் இந்த உளரல்நிதி.


Barakat Ali
டிச 19, 2025 08:06

கிறிஸ்தவ கொள்கைக்கும், திராவிட கொள்கைக்கும் வித்தியாசம் கிடையாது. என துணை முதல்வர் உதயநிதி கூறினார். கிறிஸ்தவ மதத்தின் மீது நம்பிக்கையும், மரியாதையும் வெச்சிருக்குறவங்க என்ன நினைப்பாங்க ????


Balaa
டிச 19, 2025 07:13

பணத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கொள்கை. ஏசுபிரான் கற்பித்த கிறிஸ்த்துவம் இது இல்லை.


சமீபத்திய செய்தி