உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போராடுவதைத் தவிர வேறு வழியில்லை: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை

போராடுவதைத் தவிர வேறு வழியில்லை: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை

மதுரை: ''எட்டு முறை முதல்வரை சந்தித்தும் கோரிக்கைகள் நிறைவேறாததால், போராடுவதைத் தவிர வேறு வழியில்லை'' என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செல்வம் தெரிவித்ததாவது:

அரசு ஊழியர்களுக்கான சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு 2021 ல் காலவரையின்றி முடக்கப்பட்டது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள 9 லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சரண்டர் விடுப்பு நிவாரணமாக இருந்தது.அ.தி.மு.க., ஆட்சியில் ஓராண்டும், பின்னர் காலவரையின்றியும் முடக்கப்பட்டதால் இனி வழங்க இயலாது என தெரிகிறது.காலியிடங்களை நிரப்புவதில் தாமத போக்கை அரசு கடைபிடிக்கிறது. தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக 'அவுட் சோர்ஸிங்' மூலம் ஊழியரை நியமிக்கின்றனர்.இனி தனியார் முகமை மூலமே சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் நியமனம் என்பது அரசு கொள்கையாகி விட்டது. இது சமூகநீதிக் கொள்கைக்கு எதிரானது. சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், 21 மாத கால நிலுவை ஊதியம், சாலைப் பணியாளர்களுக்கு 41 மாதங்களை பணிக்காலமாக அறிவிப்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சிக்கின்றனர். தற்போதைய முதல்வர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று நுாறு சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என உத்தரவாதம் அளித்தார். இதுவரை அவை நிறைவேறவில்லை.வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றாது என்ற மனநிலைக்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் வந்து விட்டனர். முதல்வரை எட்டு முறை சந்தித்து பேசி வலியுறுத்தியுள்ளோம். அதன்பின்னும் நிறைவேறாததால், சக்தி மிக்க போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை. துாத்துக்குடியில் டிச.13, 14 ல் நடைபெற உள்ள மாநாடு திருப்பு முனை மாநாடாக அமையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ethiraj
டிச 10, 2024 16:48

No of districts No of corporations No of boards No of undertaking No of staff If reduced by 50 % old pension scheme possible 28 years of service or 55 years of age retirement can be introduced post retirement no Da


Bhaskaran
டிச 09, 2024 12:11

முதலில் லஞ்சம் வாங்காமல் பணியாற்று வீர்களா உங்கள் ஊதியமே அதிகம்


R.RAMACHANDRAN
டிச 09, 2024 06:56

அரசு ஊழியர்கள் ஆணவம் மிக்கவர்களாக இருந்துகொண்டு மக்களுக்கு இருக்கும் குறைகளை லஞ்சம் இன்றி களைவதில்.லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே சட்ட விரோதமான சேவைகளை எல்லாம் செய்கின்றனர்.இவர்கள் கைகளில் ஆளும் அரசியல் வாதிகள் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு கட்சியை வளர்க்கும் பணிகளில் தீவிரமாக உள்ளனர்.இதுதான் இன்றைய மக்களாட்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை