உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மும்மொழி கொள்கையை ஏற்று கொள்வதில் தவறு இல்லை ஐ.ஜே.கே., மாநில துணை பொதுச் செயலாளர் உதயசூரியன் கருத்து

மும்மொழி கொள்கையை ஏற்று கொள்வதில் தவறு இல்லை ஐ.ஜே.கே., மாநில துணை பொதுச் செயலாளர் உதயசூரியன் கருத்து

தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பா.ம.க., தலைவர் அன்புமணி நடத்தும் போராட்டத்திற்கு ஐ.ஜே.கே., முழு ஆதரவு தரும். மும்மொழி கொள்கையை ஏற்று கொள்வதில் தவறில்லை. விருப்பப்பட்டவர்கள் படிக்கலாம். கட்டாயமாக்க கூடாது என்பதுதான் இந்திய ஜனநாயக கட்சியின் கருத்து. வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது ஹிந்தியை பயன்படுத்த வேண்டி உள்ளது. மொழி தெரியாமல் இருப்பதால் வேலைவாய்ப்பில் நமது குழந்தைகள் பின் தங்கி உள்ளனர்.சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை வேலியே பயிரை மேய்கிறது. 1ம் வகுப்பு குழந்தையிலிருந்து பெண்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. அரசு சட்டங்களை கடுமையாக மாற்ற வேண்டும். அப்போதுதான் பாலியல் தொந்தரவு நீங்கும்.2026ல் பா.ஜ., கூட்டணி தொடருமா என்பது உயர் மட்ட குழு கூட்டம் கூட்டி முடிவு எடுப்போம். நடிகர் விஜயின் அரசியல் வருகை ஆரோக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அவர் வந்தால் முன்னேற்றம் வரும் என்றால் எங்கள் கூட்டணியில் த.வெ.க., வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனை நாங்கள் விரும்புகிறோம்.-உதயசூரியன் மாநில துணை பொதுச் செயலாளர்ஐ.ஜே.கே.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை