உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அரசியலில் எப்படியோ சினிமாவில் ஒற்றுமையாக இருக்கணும்

 அரசியலில் எப்படியோ சினிமாவில் ஒற்றுமையாக இருக்கணும்

மக்கள் நீதி மய்யம் தலைவரான நடிகர் கமல், சென்னையில் நேற்று அளித்த பேட்டி: அமரன் திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசியலில் எப்படி இருந்தாலும், சினிமா, நாடு என்று வந்தால், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாட்டுக்கு தேவையான படத்தை நாங்கள் எடுத்து உள்ளோம். இதற்கு, நாடு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எங்கள் எதிர்பார்ப்பு நியாயமானது தான். இது போன்ற படங்கள் நிறைய எடுக்க வேண்டும். உலகத்தர சினிமா நிகழ்ச்சியில் என் திரைப்படம் திரையிடப்படுவது மகிழ்ச்சி. இது, என் நாட்டிற்கும் பெருமை. மருதநாயகம் திரைப்படத்தை மீண்டும் எடுக்க வேண்டும் என்பது என் ஆசை. பல தொழில்நுட்பங்கள் முன்னேறி இருக்கும் இந்த காலத்தில், அதுவும் சாத்தியம் என்பது தான் என் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்