உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி வைக்க ரூ.50 கோடி, ரூ.100 கோடி கேட்கின்றனர்: உண்மையை போட்டு உடைத்தார் திண்டுக்கல் சீனிவாசன்

கூட்டணி வைக்க ரூ.50 கோடி, ரூ.100 கோடி கேட்கின்றனர்: உண்மையை போட்டு உடைத்தார் திண்டுக்கல் சீனிவாசன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி:'' கூட்டணி வைக்க வருகிறவர்கள் 20 சீட் வேண்டும். ரூ.50 கோடி ரொக்கமாக கொடுங்கள். ரூ.100 கோடி கொடுங்கள் எனக் கேட்கின்றனர்,'' என அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.திருச்சியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் என பழனிசாமி கூறிவிட்டார். தங்கமணியையும், என்னையையும் அழைத்து 'நீங்கள் பேட்டி கொடுத்து கூட்டணியை கெடுத்து விடாதீர்கள்' என்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n5f6lajs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'நாங்கள் எதற்கு கெடுக்க போகிறாம். கூட்டணி இருந்தால் நல்லது தானே' என்றோம். அதற்கு அவர், 'நீங்க யாரையாவது திட்டி விட்டு வந்துவிடுவீர்கள். அவர்கள் கோபித்து கொள்வார்கள். நீங்கள் பேசியதற்கு அப்புறம் என்ன அப்படி பேசிவிட்டார்' என்பார்கள்.'அண்ணா பார்த்துக்கோங்க' என எங்களிடம் அவர் கையெடுத்து கும்பிடுகிறார். 'எதற்கு வம்பு, நாங்கள் நிருபர்களை பார்க்கிறது இல்லை' என்றேன். வரும்போது கூட மைக்கை நீட்டினர். 'வணக்கம் ஐயா... வணக்கம் ஐயா...' என போய் விட்டோம். அவர்களுக்கு பரபரப்பு வேண்டும். அவர்களுக்கு செய்தி வர வேண்டும். இதை சொன்னால், கட்சியை விட்டு பழனிசாமி எங்களை நீக்கிவிடுவார். இப்படி கொடுமை போய் கொண்டு உள்ளது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், பொறுப்பு வேண்டும். கூட்டணி விவகாரத்தில் நரக வேதனையில் உள்ளார்.யார் வந்தாலும் சும்மாவா வருகிறார்கள்.' 20 சீட் வேண்டும். 50 கோடி ரூபாய் ரொக்கமாக கொடுங்கள். ரூ.100 கோடி கொடுங்கள்' என கேட்கிறார்கள்.நெல், அரிசி விற்பனை மாதிரி பேசுகிறார்கள். எங்கே போவது. அதிமுக மார்க்கெட் போய் கொண்டுள்ளது. பழனிசாமி பற்றி தான் மக்கள் பேசுகிறார் என ஒரு கட்சி தலைவர் சொல்கிறார். ஏன் கொஞ்சம் ரூபாயை குறைத்து கொண்டால் என்னவென்றால், இதை வைத்து தான் 'பிசினஸ்' நடத்துகிறோம் என்றார். இப்படி ஓடிக் கொண்டு உள்ளது. இந்த கொடுமையில் பழனிசாமி மாட்டிக் கொண்டு உள்ளார். அந்த ரணத்தோடு பேசிக் கொண்டுள்ளார். நல்ல செய்தி வரும். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Ethiraj
நவ 21, 2024 10:09

Parties may ask 1000 crores ,even voters may ask 10000. 2026 everyone collect their share


Ramalingam Muthukumarasamy
நவ 20, 2024 19:27

நீங்களும் கொள்ளை அடிக்கதானே கூட்டணி தேடுறீங்க, ஜெயிச்ச உடனே விஜய் காந்த்தை கழற்றி விட்டது யார்???


ராமகிருஷ்ணன்
நவ 20, 2024 07:23

இதுவரை நடந்த கூட்டணி பேச்சு வார்த்தையில் எடப்பாடி திறமையாக எதிலுமே செயல்பட்டதில்லை. அந்த கூமுட்டையை விரட்டினால் தான் அதிமுக பிழைக்கும்.


ராமகிருஷ்ணன்
நவ 20, 2024 07:19

சுருட்டிய காசை வெளியே எடுத்து போடுங்க. வலிக்க தான் செய்யும். எடப்பாடியும் ஜெயகுமாரும் கட்சியை காலி பண்ணிவிட்டு தான் அடங்குவானுக.


PARTHASARATHI J S
நவ 20, 2024 07:14

இதனைக் கேள்விப்பட்டதும் வாரச்சந்தையீல் மாடு, ஆடு விற்பனைதான். IPL மேட்ச்லே விளையாட்டு வீரர்களை விலைக்கு வாங்குவது போல உள்ளது. வாழ்க, ஒழிக கொஷம் போடக்கூட பணம் தேவையப்பா. மாநாடு நடத்துவதும் கல்யாணமும் ஒன்றே. துண்ட தலையில் போட்டுண்டுதான் போகலாம். எடப்பாடியாரே ! உங்க மனஓட்டத்தே தி.சீ புரிய வைத்துவிட்டார்.


K.Ramakrishnan
நவ 19, 2024 22:45

அய்யா, இருப்பவர்களிடம் கேட்கின்றனர். நீங்கள் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சிநடத்தி குவித்து வைத்திருக்கிறீர்கள். எனவே அள்ளித் தராவிட்டாலும் கிள்ளித் தாருங்கள். அவர்களும் பிழைத்துக் கொள்ளட்டும். அது சரி.. ரூ.௧௦௦ கோடி கேட்டது யார் ..அண்ணியாரா? ஆடா? அப்பா– பிள்ளையா? பொதுவுடைமை கட்சிகளா? சீமானா? சிறுத்தையா? தஞ்சை பண்ணையாரா? மன்னார்குடி மைந்தரா? அதையும் சொல்ல வேண்டியது தானே?


Haja Kuthubdeen
நவ 20, 2024 10:23

கேட்பது யார் என்பதை உங்க கருத்திலேயே சொல்லிட்டீங்க...


K.Ramakrishnan
நவ 19, 2024 22:44

அய்யா, இருப்பவர்களிடம் கேட்கின்றனர். நீங்கள் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சிநடத்தி குவித்து வைத்திருக்கிறீர்கள். எனவே அள்ளித் தராவிட்டாலும் கிள்ளித் தாருங்கள். அவர்களும் பிழைத்துக் கொள்ளட்டும். அது சரி.. ரூ.100 கோடி கேட்டது யார் ..அண்ணியாரா? ஆடா? அப்பா– பிள்ளையா? பொதுவுடைமை கட்சிகளா? சீமானா? சிறுத்தையா? தஞ்சை பண்ணையாரா? மன்னார்குடி மைந்தரா? அதையும் சொல்ல வேண்டியது தானே?


adalarasan
நவ 19, 2024 22:05

ஒரு கட்சி பணம்,kudukkuthu என்றால், மற்ற கட்சிகளையும் கேட்பது ஆச்சரியம் இல்லை, தமிழ்நாடு எங்கே போகுது? வெட்கி தலை குனியவேண்டும்?


வைகுண்டேஸ்வரன்
நவ 19, 2024 22:04

இங்கே பல பாஜக ஆதரவு வாசகர்கள் பல்லு படாம அதிமுக வுக்கு செஞ்சு விட்டிருக்காங்க, பாவம். "அடப்பாவிகளா கோடிகள் கொடுத்தா கூட்டணி. இந்த அதிமுக வை மக்கள் புறக்கணிக்க வேண்டும் " என்று யாரும் எழுத மாட்டார்கள். ஏனெனில் தேர்தல் ஆற்றில் இறங்க , இருக்கும் ஒரே ஒரு மண் குதிரை அதிமுக மட்டும் தான்.


karupanasamy
நவ 20, 2024 03:47

கேவலம் கம்மீஸுங்களுக்கே 10 வருசத்துக்கு முன்னாடியே தொற 25 கோடி அக்கவுண்ட் டிரான்ஸ்பேர் பண்ணது மறைக்கப்பாக்குறியா?


Ms Mahadevan Mahadevan
நவ 19, 2024 21:46

எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டு 20 சதவீத ஓட்டு வாங்காத கட்சிகளை தேர்தல் ஆணையம் கலைத்து விட வேண்டும் . அதற்கு டி என் ஷேசன் மாதிரி தில் உள்ளவர் தேர்தல் ஆணையராக வரவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை