உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வை நம்பி இருப்பதுபோல் தோற்றம் உருவாக்குகிறார்கள்: திருமா வருத்தம்

தி.மு.க.,வை நம்பி இருப்பதுபோல் தோற்றம் உருவாக்குகிறார்கள்: திருமா வருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ஏதோ நாம் தி.மு.க.,வை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mttfsyyy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து திருமாவளவன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: ஒரு நாள் கூட ஓய்வு இல்லை. ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை என்கிற நிலை நீடிக்கிறது. கட்சி பணியில் கவனம் செலுத்த முடியாத நிலையிலும் கூட, மஞ்சள் நீராட்டு, திருமண நிகழ்ச்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்து அழைத்து செல்வதில் நமது கட்சியினர் குறியாக இருக்கிறீர்கள். 24 மணி நேரமும் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.

தி.மு.க.,வை நம்பி...!

ஆனால் எந்த பணிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது முக்கியமானது. ஏதோ நாம் தி.மு.க.,வை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அந்த அற்பர்களின் தோற்றத்தை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்க தோழர்கள் அதில் தெளிவை பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை.

துணிச்சல், தெளிவு,

எல்லா கதவுகளையும் திறந்து வைத்து இருப்பது. ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது. கூடுதல் பேரம் பலிக்கும் இடத்தில் உறவை வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது எல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை. அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல். நாம் அதை பொருட்படுத்தவில்லை, ஈடுபாடுகாட்டவில்லை. எந்த எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்று சொன்னால் அதற்கும் ஒரு துணிச்சல், தெளிவு, தொலைநோக்கு பார்வை வேண்டும்.

துருப்புச்சீட்டு

இது புரிந்து கொள்ள முடியாத புள்ளர்கள், அற்பர்கள் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் நமக்கு எதிரான அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். வி.சி.க., பிற அரசியல் கட்சிகளை போல் இல்லாமல், ஒரு முன் மாதிரியாக இயங்கக் கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது. தொடர்ந்து அதை உறுதி படுத்தும். தி.மு.க., கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு வி.சி.க., தான்.

கூட்டணி உறவு

எங்களது தொலைநோக்குப் பார்வையை பொறுத்துக் கொள்ளாத அற்பர்கள் அவதுாறு பரப்புகின்றனர். தோழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.ஆளும் கட்சியோடு இருக்கும் முரண் என்பது வேறு, கூட்டணி தொடர்பாக நாம் கையாளும் உத்தி என்பது வேறு. ஆளும் கட்சியோடு நாம் வைக்கும் கோரிக்கை வேறு. தி.மு.க., உடன் நாம் வைத்திருக்கும் கூட்டணி உறவு என்பது வேறு. இதனை நாம் புரிந்து கொண்டு கவனமாக இயங்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

sugumar s
ஏப் 25, 2025 12:39

எல்லாரும் நீங்க தி மு கா பணத்தை நம்பித்தான் இருக்கீங்கன்னு சொல்றாங்களே அதுல கொஞ்சம் கூட உண்மை இல்லையா ?? என்ன இது பாண்டி நாட்டுக்கு வந்த சோதனை


Minimole P C
ஏப் 22, 2025 08:18

While Thiruma is a curse to TN


MARUTHU PANDIAR
ஏப் 21, 2025 15:34

பெட்டிக்கு பெட்டியும் வேணும். அப்படீன்னா கூட்டணிக்கு ஏதாவதொரு பெரிய கட்சியும் வேணும்... அதுக்கு தொண்டர்கள் நமக்காக உழைத்துக் கொண்டே இருக்கனும். அவுங்க இல்லன்னா/சோர்ந்துட்டாங்கன்னா கூட்டணியும் இல்ல, பதவியும் இல்ல, பெட்டியும் இல்ல. அப்பப்போ இது மாதிரி சீன் போட்டு போட்டு அவுங்க தயவை,உழைப்பை தக்க வெச்சுக்கிட்டே இருக்கணும். அம்புடுதேன். அப்புறம் பதவி, பேட்டி எல்லாம் கேரண்டி அப்புடிங்கறாங்க


RAMESH
ஏப் 21, 2025 14:40

தனியாக நின்றால் ஒரு தொகுதியிலும் டெபாசிட் கிடைக்காது...


Murugan b
ஏப் 21, 2025 14:04

வேற வழி இல்லை ராசா இப்புடிதான் போலிக்குனும்


Saai Sundharamurthy AVK
ஏப் 21, 2025 04:38

ஆசையே துன்பத்திற்கு காரணம் !!!


Sankar Ramu
ஏப் 21, 2025 02:43

உதைக்கு பக்கத்தில் கீழே உட்கார்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.


vinoth kumar
ஏப் 21, 2025 02:32

சாதி கட்சிகள் தி மு க அல்லது அ தி மு க கூட்டணியில் இல்லாமல் தனித்தோ அல்லது முன்றாவது கூட்டணி அமைத்தோ நின்றால் டெபாசிட் பெறுவதே கடினம். ஏனெனில் அவர்களுடைய சாதியினர் இரு திராவிட கட்சிகளின் ஓட்டு வங்கிகளிலும் உள்ளனர் . அவர்களே அவர்கள் சாதி கட்சிக்கு ஒட்டு போட மாட்டர்கள் . இதுதான் உண்மை. இதனால்தான் பெரும்பான்மை சாதியினரின் கட்சியான பா ம க ஆட்சிக்கு வர முடியவில்லை.


PATTALI
ஏப் 20, 2025 21:35

வேறு எங்கு போவாய். பிஜேபி கூட்டணிக்கா? அல்லது தனித்து நிற்க்கப்போகிறாயா?


Ramesh Sargam
ஏப் 20, 2025 20:28

உண்மை அதுதான். தோற்றம் ஏன் உருவாக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை