உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என் போனையும் ஒட்டு கேட்டிருக்காங்க ராமதாஸ் அடுத்த குண்டு

என் போனையும் ஒட்டு கேட்டிருக்காங்க ராமதாஸ் அடுத்த குண்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தன் மொபைல் போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், இது பற்றி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில், தான் அமரும் நாற்காலியின் கீழே, ஒட்டு கேட்பு கருவி வைக்கப்பட்டு இருந்ததாக, ராமதாஸ் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், 'ஒட்டு கேட்பு கருவியை வைத்தது, மகன் அன்புமணி தான்' என, கடந்த 2ம் தேதி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், தன் வீட்டில் உள்ள 'சிசிடிவி கேமரா'க்களில் பதிவான காட்சிகளை, ஒட்டு கேட்பு கருவி வாயிலாக வேறொரு இடத்தில் பதிவு செய்துள்ளதாக, தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் கண்டறிந்து, ராமதாசிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தன் மொபைல் போனும் ஒட்டு கேட்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ராமதாசுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Srinivasan
ஆக 05, 2025 11:03

அப்படி போடு pegasus உன்னிடமும் வேலை செய்தது என்று சொல்லு . நீ எவ்வளவு பணம் பேரம் பேசினாய் என்று உன்னுடைய மகனுக்கு தெரிய வேண்டாமா ? ஒட்டு கேட்கத்தான் செய்வான்? கொஞ்சம் இருந்த மரியாதை கூட போய் விட்டது உன்மேல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை