உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்., குழு அமைக்க கோரி திருமா பதற்றம்

காங்., குழு அமைக்க கோரி திருமா பதற்றம்

த.வெ.க., தலைவர் விஜயை, சங்பரிவார்கள் இயக்குவதாக, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டுகிறார். கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, பா.ஜ., குழு அமைத்ததும், காங்கிரசும் குழு அமைக்க வேண்டும் என, அவர் பதறுகிறார். முதல்வரும், அவரது அமைச்சர்களும், தி.மு.க.வும், தமிழகத்தில் எந்த சம்பவங்கள் நடந்தாலும், 'மணிப்பூரை பாருங்கள்; காஷ்மீரை பாருங்கள்', என்கின்றனர். முதலில், தமிழகத்தை பாருங்கள். கரூர் சம்பவத்தில், களத்தில் நிர்வாகம் செய்ய வேண்டிய, துணை முதல்வர் உதயநிதி, துபாயில் இருந்து வந்தார்; பார்த்தார்; மீண்டும் துபாய் சென்று விட்டார். இவ்வளவுதான் மக்கள் பிரச்னையில் அவர்களுக்கு உள்ள ஆர்வம். சென்னை தி.நகரில், புதிதாக திறந்த மேம்பாலத்திற்கு, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன் பெயர் வைத்துள்ளனர். நாட்டில் எத்தனையோ தியாகிகள் இருக்க, மக்கள் வரிப்பணத்தில் கட்டிய மேம்பாலத்துக்கு, தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ பெயரை வைத்தது கண்டிக்கத்தக்கது. தமிழிசை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை