மேலும் செய்திகள்
'மது ஒழிப்பு நாடகம் எடுபடாது!' தமிழிசை தடாலடி
17-Sep-2024
திருமாவளவன் மதுவிலக்கு மாநாடு நடத்துவதாக கூறி, அது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப் போவதாகச் சொல்லி இருக்கிறார். இது பிரச்னையை வேறு பக்கம் திருப்பி விடும் முயற்சிதான். என்றாலும், அடிப்படையான ஒரு விஷயத்தை அவர் மறைத்து விட்டு நாடகம் ஆடுவது தான் வேடிக்கையாகவும்; வேதனையாகவும் உள்ளது. மது மற்றும் மதுவிலக்கு ஆகியவை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பட்டியலில் எட்டாவது இடத்தில் வருகிறது. மத்திய அரசுக்கு அதில் அதிகாரம் இல்லை. அப்படி இருக்கும்போது, மதுவிலக்கை நாடு முழுதும் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று எதன் அடிப்படையில் திருமாவளவன் கூறுகிறார் என தெரியவில்லை. சட்டம் படித்தவர் தான். ஒழுங்காக படித்திருந்தால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக படித்திருக்க வேண்டும். அதெல்லாம் செய்யாமல், எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை மத்திய அரசு பக்கம் திருப்பி விட்டு, நாடகம் போடுவதையே திருமாவளவன் உள்ளிட்ட தமிழக அரசியல்வாதிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அஸ்வத்தாமன்,மாநில செயலர், தமிழக பா.ஜ.,
17-Sep-2024